எஸ்.ஏ. சந்திரசேகரன் மீது போலீஸில் கேயார் புகார்
Page 1 of 1
எஸ்.ஏ. சந்திரசேகரன் மீது போலீஸில் கேயார் புகார்
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆவணங்களை எஸ்.ஏ. சந்திரசேகரன் அணியினர் எடுத்துச் சென்று விட்டதாகவும், அதை மீட்டுத் தருமாறும் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் இயக்குநர் கேயார் மனு கொடுத்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜை, இயக்குநர் கேயார் மற்றும் ராஜன், பிரமிடு நடராஜன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது 28-10-2012 அன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அண்மையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் எஸ்.ஏ.சந்திரசேகரன் 10 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
தேர்தல் தோல்விக்கு பின்னர் சந்திரசேகரன், சங்கத்தின் வரவு, செலவு, வங்கிக் கணக்குப் புத்தகம், காசோலை புத்தகம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முறைப்படி வெற்றிப் பெற்ற எங்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் எந்த ஆவணத்தையும் ஒப்படைக்கவில்லை.
மாறாக சங்க அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் அவர்களது வீடுகளுக்குச் எடுத்துச் சென்றுவிட்டனர். இது ஒரு குற்றச் செயலாகும். எனவே, சங்கத்தின் ஆவணங்களை காவல்துறை பறிமுதல் செய்து, அதை எடுத்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம்.
தேவைப்பட்டால் உள்துறை முதன்மைச் செயலரையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இயக்குநர் மணிரத்னம் மீது போலீஸில் புகார்
» எஸ் ஏ சந்திரசேகர் மீது கேயார் போலீசில் புகார்!
» கடல் படத்தால் ரூ.17 கோடி நஷ்டம்- மணிரத்னம் மீது போலீஸில் புகார்!
» சட்டவிரோதமாக பொதுக்குழு: எஸ்.ஏ.சந்திரசேகர் மீது கமிஷனர் அலுவலகத்தில் கேயார் புகார்
» தயாரிப்பாளர் கேயார் தலைமையில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது நடவடிக்கை கோரி புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum