தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பவர் ஸ்டார் நடிப்பில் "நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க"

Go down

பவர் ஸ்டார் நடிப்பில் "நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க" Empty பவர் ஸ்டார் நடிப்பில் "நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க"

Post  ishwarya Fri Mar 22, 2013 2:02 pm

கண்ணா லட்டு திண்ணா ஆசையா திரைப்படத்தின் வெற்றி பவர் ஸ்டாரை உச்சத்துக்கு கொண்டு போய்யுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து இவரை தேடி படங்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். அந்த வகையில் பவர் ஸ்டார் அடுத்ததாக ஒப்பந்தமாகி இருக்கும் திரைப்படம் "நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க".

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனராக அறிமுகமாகிறார் ஜோவி. இவர் இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரிடம் பல படங்களுக்கு உதவி இயக்குனராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர். ஜோவி, இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனின் இளைய மகனாவார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கர்நாடக மாநிலம் பெல்ஹாம்மைச் சேர்ந்த யாசின் ஹவேலி கதாநாயகர்களில் ஒருவராக நடிப்பதுடன் படத்தைத் தயாரிக்கவும் செய்கிறார். மேலும் பாலாஜி, திருப்பதி நடிக்கும் இந்தப் படத்தில் சினேஹல், திஷா ஆகியோர் நாயகிகளாக அறிமுகமாகின்றனர். அவுரங்காபாத்தைச் சேர்ந்த அப்சர்கான் வில்லனாக அறிமுகமாகிறார். சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

"திருட்டையே தொழிலாகக் கொண்ட மூன்று இளைஞர்கள், திருட்டு - பொய் - புரட்டு - பித்தலாட்டம் என்று எதுவுமே தெரியாத பவர் ஸ்டாருடன் சேருகின்றனர். பவருடன் சேர்ந்த திருடர்கள் திருந்துகின்றனரா அல்லது திருடர்களுடன் சேர்ந்த பவரும் திருடன் ஆகிறாரா என்பது தான் படத்தின் கதைச் சுருக்கம்". படப்பிடிப்பு, வரும் மார்ச் 14ம் தேதி தொடங்கி ஊட்டி, தூத்துக்குடி, அந்தமான் போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum