தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:எள்ளுருண்டை

Go down

 சமையல்:எள்ளுருண்டை Empty சமையல்:எள்ளுருண்டை

Post  ishwarya Thu Mar 21, 2013 12:10 pm



கொழுத்தவனுக்கு கொள்ளை கொடு இளைத்தவனுக்கு எள்ளைக் கொடுனு பழமொழி ஒன்று உண்டு. குழந்தைகளுக்கும், முக்கியமாக பெண்களுக்கு மிகச் சிறந்த சத்துள்ள இனிப்பு வகைதான் இந்த எளிமையான எள்ளுருண்டை. வறுக்கும் வாடையிலேயே சாப்பிடத் தூண்டும் சுவை. ம்ம்ம்.... சுவைச்சுப் பாருங்க!

தேவையான பொருட்கள்:

வெள்ளை எள்ளு விதை - 200 கிராம்
வெல்லம் - 100 கிராம்

செய்முறை:

* வாணலியில் எள்ளை போட்டு அது வெடிப்பதற்கு ஆரம்பிக்கும் வரை வறுக்கவும்.

* வேறொரு பாத்திரத்தில் வெல்லப்பாகு செய்யவும்.

* பாகானது போதுமான அளவிற்கு வரும்வரை சூடு செய்யவும்.

* கெட்டியான அளவிற்கு ஒரு துளி பாகை நீரில் போட்டால் உடனே கெட்டியாக வரவேண்டும்.

* இந்த நிலைக்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி இதனை எள்ளுடன் சேர்க்கவும்.

* கையால் தாங்குமளவிற்கு சூடு ஆறிய பிறகு கையில் அரிசி மாவையோ (அ) நெய்யையோ தடவவும். கைகளைப் பயன்படுத்தி எள்ளை சீரான சிறு உருண்டைகளாக செய்யவும்.

குறிப்பு:

எள்ளுருண்டைகள் கெட்டியாக உருவாவதற்கு பாகை 2- கம்பி சீரான பதத்திற்கு தயாரிக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum