எள்ளுருண்டை
Page 1 of 1
எள்ளுருண்டை
எள் & 200 கிராம் வெல்லம் & 100 கிராம்
எள்ளை தண்ணீரில் ஊறவைத்து கல், மண் இல்லாமல் அரித்துக் களைந்து வடிகட்டி வைக்க வேண்டும். நன்றாக தண்ணீர் வடிந்ததும் வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து வறுக்கவும். படபடவென்று சத்தம் வரும். அது அடங்கும் வரை வறுக்கவும். எள்ளை எடுத்து நசுக்கினால் ஈரப்பதம் இருக்கக் கூடாது. பொடியாக வேண்டும். பிறகு வாணலியில் அரை தம்ளர் தண்ணீர் விட்டு வெல்லத்தை போட்டு கெட்டிப்பாகு வரும் வரை காய்ச்சவும். கெட்டிப்பாகானதும் இறக்கி வைத்து, வறுத்து வைத்துள்ள எள்ளின் மீது கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டியால் கலக்கவும். எள் முழுவதும் பாகில் பரவும்படி கலக்கவும். சூடு சற்று ஆறிய பிறகு சிறிது நெய்யைத் தொட்டுக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். செய்யும் முறை & 2 எள்ளை நன்றாக வறுத்ததும் சற்று நேரம் ஆற விடுங்கள். ஆறிய பிறகு மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி பொடியாக்கிக் கொள்ளுங்கள். வெல்லத்தைத் தனியாக பொடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எள்ளுருண்டை
» தேங்காய் எள்ளுருண்டை
» சமையல்:எள்ளுருண்டை
» தேங்காய் எள்ளுருண்டை
» விநாயகரும் விரும்பி சாப்பிடும் எள்ளுருண்டை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum