விநாயகரும் விரும்பி சாப்பிடும் எள்ளுருண்டை!
Page 1 of 1
விநாயகரும் விரும்பி சாப்பிடும் எள்ளுருண்டை!
எள்ளுருண்டை உடலுக்கு மிகவும் சிறந்தது. அதிலும் பெண்கள் இதை அதிகம் சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். மேலும் விநாயகருக்கு இந்த எள்ளுருண்டை என்றால் மிகவும் விருப்பமானது. அதுமட்டுமல்லாமல், விநாயகர் சதுர்த்தியன்று வீட்டில் செய்யும் இனிப்புகளுடன், இந்த எள்ளுருண்டையையும் செய்து, விநாயகருக்குப் படைக்கலாம். இப்போது அந்த எள்ளுருண்டையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கருப்பு/வெள்ளை எள் - 2 கப்
வேர் கடலைப்பருப்பு - 2 கப்
வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள் மற்றும் வேர்கடலையை தனித்தனியாக வைத்து வறுக்கவும்.
பின் வெல்லத்தை நன்கு தட்டிக் கொள்ளவும்.
பின்பு மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள எள் மற்றும் வேர்க்கடலையை போட்டு ஓரளவு அரைத்துக் கொள்ளவும். பின்பு அதில் தட்டி வைத்துள்ள வெல்லத்தை போட்டு, அரைத்துக் கொள்ளவும். (வேண்டுமென்பவர்கள் எள்ளை அரைத்தும் செய்யலாம், அரைக்காமலும் செய்யலாம்.)
பின் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஏலக்காய் சேர்த்து, உருண்டைகளாக பிடித்து வைக்க வேண்டும்.
இப்போது சுவையான எள்ளுருண்டை ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேங்காயும், விநாயகரும்...
» தேங்காயும், விநாயகரும்...
» எள்ளுருண்டை
» எள்ளுருண்டை
» விநாயகரும் விநோதச் செய்திகளும்
» தேங்காயும், விநாயகரும்...
» எள்ளுருண்டை
» எள்ளுருண்டை
» விநாயகரும் விநோதச் செய்திகளும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum