பெப்சி தேர்தல் - அமீர் வெற்றி
Page 1 of 1
பெப்சி தேர்தல் - அமீர் வெற்றி
பெப்சி அமைப்புக்கு நடந்த தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அமீர் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை சர்வ வல்லமை பொருந்திய அமைப்பாக பெப்சியே உள்ளது. 23 சங்கங்கள் பெப்சியில் இணைந்திருப்பதால் பெப்சியின் விருப்பமே திரையுலகின் விதியாக இருக்கும். அப்படிப்பட்ட பெப்சி அமைப்புக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் பிரச்சனை எழுந்ததும் அந்தப் பிரச்சனை இன்னும் முடிவடையாமல் நீண்டுக் கொண்டிருப்பதும் தெரிந்ததே. பெப்சி, தயாரிப்பாளர் பிரச்சனை பெரிதானதற்கு பெப்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய அமீரின் பேச்சும், அறிக்கையும் முக்கிய காரணமாக பேசப்பட்டது.
இந்நிலையில் பெப்சி தலைவர் பதவிக்கு அமீர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர் விசு. கடும் போட்டிக்கு மத்தியில் அமீர் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
மொத்தம் பதிவான 65 வாக்குகளில் 37 வாக்குகள் பெற்று அமீர் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வெற்றி பெப்சி, தயாரிப்பாளர்கள் மோதலை மேலும் பெரிதாக்குமா?
திரையுலகமே முடிவு தெரிய காத்திருக்கிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘அலெக்ஸ் பாண்டியன்’ படப்பிடிப்பில் பெப்சி கலாட்டா – அமீர் காரணமா?
» ஃபெப்சி தேர்தல்: தலைவர் பதவிக்கு விசு-அமீர் போட்டி
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம நாராயணன் அணி அமோக வெற்றி!
» பெப்சி வேலை நிறுத்தம் முடிந்தது
» தயாரிப்பாளர்-பெப்சி தகராறினால் தள்ளிப்போன படங்கள்!
» ஃபெப்சி தேர்தல்: தலைவர் பதவிக்கு விசு-அமீர் போட்டி
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம நாராயணன் அணி அமோக வெற்றி!
» பெப்சி வேலை நிறுத்தம் முடிந்தது
» தயாரிப்பாளர்-பெப்சி தகராறினால் தள்ளிப்போன படங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum