தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிக்க தெரியாத ராணா இப்ப ஹாலிவுட்டில்?!

Go down

நடிக்க தெரியாத ராணா இப்ப ஹாலிவுட்டில்?! Empty நடிக்க தெரியாத ராணா இப்ப ஹாலிவுட்டில்?!

Post  ishwarya Mon Mar 18, 2013 6:03 pm

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பாளர்களில் ஒருவரனா ராமாநாயுடுவின் பேரன்தான் ராணா டக்குபதி. 'லீடர்' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் அறிமுகமான ராணாவை உடனே பாலிவுட்டில் கூப்பிட்டு ஒரு ஹிந்தி படம் கொடுத்தார்கள். இதனால் தெலுங்குப் படங்களை விட்டு ஹிந்திபடங்களில் களமிறங்கினார். ஆனால் "ராணாவுக்கு நடிக்கவும் தெரியவில்லை, ஆடவும் தெரியவில்லை" என்று பாலிவுட் விமர்சகர்கள் செம காட்டமாக விமர்சனம் செய்தார்களாம். ஆனால் அது பற்றியெலாம் அலட்டிக்கொள்ளாத ராணாவுக்கு ஹாலிவுட் வாய்ப்பு தேடி வந்து உள்ளங்கையில் விழுந்திருகிறது. இத்தனைக்கும் (ராமாநாயுடுவின் பேரன் என்பதற்காக?) பிலிம் பேர் விருது, ஜீ விருது என பல கலைமாமணி விருதுகளை கொடுத்து ராணாவை குஷிப்படுத்தினார்கள். தற்போது ராணா நடிக்க இருக்கும் ஆங்கிலப்படத்தை இயக்க இருக்கிறார் ஆதித்யா பட்டாச்சார்யா. இவர் ஹாலிவுட், பாலிவுட் என மாறி மாறி இரண்டிலும் அடிக்கடி முயன்று பார்ப்பவர். இந்திய சினிமா ஜாம்பவான்களில் ஒருவரான பீமல் ராயின் பேரன். முழுவதும் ஹாலிவுட்டில் தயாராக இருக்கும் இந்தப் படத்துக்கு 'A Momentary Lapse of Reason (AMLOR)' என்று தலைப்பு வைத்திருகிறார்கள். இதுவும் நம்ம 'கஜினி', அதன் ஒரிஜினல் மெமண்டோ டைப் கதையாம். அதாவது அமீர்கான் 'கஜினி'யில் நடிக்கும் முன்பே 1989-ல் கிட்டத்திட்ட அதேபோன்ற கதையில் நடித்த படம் 'ராக்'. இந்தப் படத்தை தழுவியே இந்த புதிய படத்தை எடுக்கிறார்களாம். மொத்த படமும் ஹாலிவுட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலேயே ஷூட் செய்ய தயாராகி விட்டார்கள். இதற்கிடையில் ராம்கோபால் வர்மா அடுத்து இயக்க இருக்கும் 'ஆந்தம்' படத்திற்காக பிரேசில் மாடல் அழகி நதாலியாவுடன் நடந்த போட்டோ ஷூட் படங்களால் பாலிவுட் வரை ஹாட் டாபிக் ஆகியிருக்கிறார் ராணா. அதுக்கென்ன... அங்கயும் கறுப்பு கண்ணாடி போட்டு மறச்சிடலாம்......

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» “ராணா” படத்தில் நடிக்க ரஜினிகாந்த் 3 மணி நேரம் முக அழகு சிகிச்சை
» “ராணா” படப்பிடிப்பு ஏற்பாடுகள் தீவிரம் ரஜினியுடன் நடிக்க தயாராகும் தீபிகா படுகோனே, இலியானா கதையில் மாற்றம்; ஆக்ஷன் காட்சிகள் குறைப்பு
» ஹாலிவுட்டில் கமல்
» ஹாலிவுட்டில் வெளியாகும் விஸ்வரூபம்!
» ஹாலிவுட்டில் உருவாகும் பொம்மலாட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum