விசா'வால் வெளியேறிய கோச்சடையான்?!
Page 1 of 1
விசா'வால் வெளியேறிய கோச்சடையான்?!
லண்டனில் நடந்த ரஜினியின் 'கோச்சடையான்' பட ஷூட்டிங் திடீரென ரத்தாகி, கேரளாவில் நடப்பது ஏன் என்பதற்கு பட தயாரிப்பாளர் பதில் அளித்தார். ரஜினி நடிக்கும் படம் 'கோச்சடையான்'. 3 டி மோஷன் கேப்சர் நவீன தொழில்நுட்ப முறையில் இப்படத்தை இயக்குகிறார் சவுந்தர்யா. இதன் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது. திடீரென்று அதன் படப்பிடிப்பு கேரளாவுக்கு இடம் மாற்றப்பட்டது. லண்டனில் விசா பிரச்சினை காரணமாக இப்படத்தின் ஷூட்டிங் இடமாற்றம் செய்யப்பட்டது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி பட இணை தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் கூறும்போது, "கோச்சடையான் படத்தில் நடிக்கும் 2 நடிகர்களுக்கு விசா அனுமதி கிடைக்கவில்லை. இதற்காக காத்திருந்து பட ஷூட்டிங் நடத்துவதற்கு போதுமான அவகாசம் இல்லை. மேலும் அந்த நடிகர்களின் கால்ஷீட் கிடைப்பதிலும் சிக்கல் இருந்தது. இப்படத்தை உலக தரத்தில் படமாக்குவதற்கான நவீன வசதிகளுடன் கேரளாவில் உள்ள ஸ்டுடியோ அமைந்துள்ளது. ஆனால் செட், மேக்அப் மற்றும் காஸ்ட்யூம் அமைப்பதில் சிரமம் உள்ளது. இதுவரை படமான ரஜினியின் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் வேகமாக நடக்கிறது" என்றார். இரண்டு நடிகர்களுக்கு விசா பிரச்சினை இருந்தது என்று இணை தயாரிப்பாளர் கூறினாலும் அவர்கள் யார் என்பதை கூறவில்லை. கேரளாவில் நடக்கும் ஷூட்டிங்கில் ரமேஷ் பாபு, ராஜு சுந்தரம் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட விசா பிரச்சினையால்தான் ஷூட்டிங் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அட! இப்டியும் ஒரு சோதனையா...?
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோபத்தில் வெளியேறிய ரோஜா!
» விவேக் பேச… அரங்கை விட்டு வெளியேறிய பத்திரிகையாளர்கள்!
» த்ரிஷா படத்தில் இருந்து வெளியேறிய ஹீரோயின்
» அழுத்தம் இல்லை - அழுது கொண்டே வெளியேறிய நடிகை
» தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பிரபு சாலமன்
» விவேக் பேச… அரங்கை விட்டு வெளியேறிய பத்திரிகையாளர்கள்!
» த்ரிஷா படத்தில் இருந்து வெளியேறிய ஹீரோயின்
» அழுத்தம் இல்லை - அழுது கொண்டே வெளியேறிய நடிகை
» தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பிரபு சாலமன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum