தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

த்ரிஷா படத்தில் இருந்து வெளியேறிய ஹீரோயின்

Go down

த்ரிஷா படத்தில் இருந்து வெளியேறிய ஹீரோயின்  Empty த்ரிஷா படத்தில் இருந்து வெளியேறிய ஹீரோயின்

Post  ishwarya Wed Mar 13, 2013 12:29 pm

திரிஷா படத்தில் இருந்து வெளியேறினார் ஷாம்னா கஸிம். இவர் தமிழில் பூர்ணா என்ற பெயரில், ‘கந்தகோட்டை’, ‘கொடைக்கானல்’, ‘துரோகி’, ‘வித்தகன்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கில் உருவாகும் படம் ‘ரம்’(ரம்பா ஊர்வசி மேனகா). இதில் த்ரிஷா பிரதான வேடத்தில் நடிக்கிறார். அவருடன் மேலும் 2 ஹீரோயின்கள் நடிக்கிறோம். தற்போது இதிலிருந்து விலகி விட்டேன். இப்படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டபிறகு ஸ்கிரிப்ட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ஏற்கனவே 3 ஹீரோயின்கள் நடிக்கும் நிலையில் கூடுதலாக இன்னொரு ஹீரோயினை சேர்ப்பதாக கூறினார்கள்.

மஸ்கட்டில் ஷூட்டிங் நடப்பதால் தொடர்ச்சியாக 22 நாட்கள் கால்ஷீட் கேட்டனர். ஆனால் ஏற்கனவே வேறு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களால் இதற்கு கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டது. நான் நடித்திருந்த திரில்லர் படம் ‘அவனு’ பெரிய ஹிட்டாகி இருந்தது. எனவே அடுத்த படத்தை கவனமாக தேர்வுசெய்ய வேண்டி உள்ளது. எனவே 4 ஹீரோயின்கள் நடிக்கும் படத்திலிருந்து விலக முடிவு செய்தேன். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்க எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. த்ரிஷாவுடன் நடிக்கிறோம் என்று சந்தோஷமாக இருந்தேன். அது நிறைவேறவில்லை. இன்னொரு படத்தில் அந்த வாய்ப்பு அமையும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum