தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பிரபு சாலமன்

Go down

தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பிரபு சாலமன் Empty தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பிரபு சாலமன்

Post  ishwarya Fri Mar 22, 2013 4:24 pm



ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனத்திலிருந்து விலகிவிட்டதாக பிரபு சாலமன் தெரிவித்துள்ளார்.

பிரபு சாலமன் தனது நண்பருடன் இணைந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

இதன் மூலம் இருவரும் இணைந்து மைனா, சாட்டை ஆகிய இரண்டு படங்களை மட்டுமே தயாரித்துள்ளனர். இதில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் சாட்டை திரைப்படத்திற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

இந்நிலையில் இயக்கம், தயாரிப்பு என இரட்டைக் குதிரையில் சவாரி செய்து வந்த பிரபு சாலமன் இனி படத்தை இயக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனத்திலிருந்து விலகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இனி தனக்கும் அந்த நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்றும், ஜான் மேக்ஸ் மட்டுமே அந்த நிறுவனத்தை பார்த்துக் கொள்வார் என்றும் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

இதுகுறித்து பிரபு சாலமன் கூறுகையில், "ஒரே நேரத்தில் தயாரித்து இயக்குவது கஷ்டமாக உள்ளது. அதனால்தான் ஷாலோம் ஸ்டுடியோவிலிருந்து விலகிவிட்டேன். தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடவிருக்கிறேன்," என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum