தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாழைப்பூ வடை

Go down

வாழைப்பூ வடை Empty வாழைப்பூ வடை

Post  oviya Sun Jul 07, 2013 5:21 pm

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1
கொண்டைக் கடலை - 100 கிராம்
துவரம்பருப்பு - 300 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - ஒரு டீ ஸ்பூன்
சீரகம் - ஒரு டீ ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
இஞ்சி - ஒரு டீ ஸ்பூன்
பூண்டு - 3 பல்
புதினா - 10 இலைகள்
மோர் - 2 டீ ஸ்பூன்
எண்ணெய் - போதுமான அளவு
உப்பு - தேவைக்கேற்ப

அரைக்க வேண்டிய பொருட்கள்:

கொண்டைக்கடலை
துவரம்பருப்பு
காய்ந்த மிளகாய்
மிளகு
இஞ்சி
பூண்டு

செய்முறை:

* மோரில் இரண்டு கப் தண்­ணீர் சேர்த்து வாழைப்பூவை எடுத்து ஊற வைக்கவும்.

* வாழைப்பூவிலிருந்து நீக்க வேண்டிய பாகங்களை நீக்கி விட்டு நறுக்கிக்கொள்ளவும்.

* மோரில் மஞ்சள் பொடியை சேர்த்து அதில் நறுக்கிய வாழைப்பூவை சேர்க்கவும்.

* அரைக்க வேண்டிய பொருட்களை ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் அரைக்கவும்.

* மோரில் ஊற வைத்த வாழைப்பூவை பிழிந்து அரைத்த மாவுடன் சேர்க்கவும்.

* அத்துடன் புதினா இலைகளையும் சேர்க்கவும்.

* கடாயில் எண்ணெயை ஊற்றி வடைகள் தயாரிக்கவும்.

* சூடான வடைகளை தேங்காய் சட்னியுடன் சேர்த்துப் பரிமாறவும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum