தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்திய அணி மேலதிக புள்ளியுடன் அபார வெற்றி: விராத் கோலி 133 ஓட்டங்கள்

Go down

இந்திய அணி மேலதிக புள்ளியுடன் அபார வெற்றி: விராத் கோலி 133 ஓட்டங்கள் Empty இந்திய அணி மேலதிக புள்ளியுடன் அபார வெற்றி: விராத் கோலி 133 ஓட்டங்கள்

Post  meenu Mon Mar 18, 2013 12:18 pm

சிபீ கிண்ண முக்கோண தொடரில் இன்று இடம்பெற்ற இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான 11வது போட்டியில் இந்திய அணி அபாரமாகவும் அதிரடியாகவும் ஆடி மேலதிக புள்ளிடன் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் 321 என்ற இமாலய வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 36.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 321 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் மிக அபாரமாக ஆடிய விராத் கோலி 86 பந்துகளை மாத்திரம் சந்தித்து 133 ஓட்டங்களைப் பெற்றார்.

அத்துடன், கம்பீர் 63 ஓட்டங்களையும், சுரேஸ் ரெய்னா 40 ஓட்டங்களையும், சச்சின், செவாக் முறையே 39, 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum