110 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி
Page 1 of 1
110 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரின் 7-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வியடைந்தது. இந்திய அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு சென்றது.
முத்தரப்புப் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி இதை தக்க வைத்துக் கொள்ளவும் இன்றைய போட்டியை வென்றாக வேண்டிய சூழலில் ஆஸ்திரேலியாவும் களம் இறங்கின. டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீரர் கொஞ்சம் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். 27.4 வது ஓவரில் ஆஸ்திரேலிய் அணி எடுத்திருந்த ரன்கள் 117 தான்! ஆனால் இதன் பிறகு நிகழ்ந்ததுதான் அதிரடி! கனவிலும் நினைத்துப் பார்க்க போடு!
மைக் ஹசியும் பாரஸ்டும் இணைந்து ஆடுகளத்தின் போக்கையே மாற்றினர். ஹசி 52 பந்துகளை எதிர்கொண்டு 59 ரன்களைக் குவித்தார். பாரஸ்டும் அதிரடியாக ஆடி 52 ரன்களை எடுத்து 44-வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 223 ரன்களை எடுத்திருந்தது.
இதற்குப் பிறகும் இந்திய அணி படுமோசமாக பந்துவீசியது. வினய் குமார் வீசிய 49-வது ஓவரில் மட்டும் 18 ரன்களை ஆஸ்திரேலியா அள்ளியது. கடைசி ஓவரில் 15 ரன்களை குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் 110 ரன்களை குறிப்பாக கடைசி 6 ஓவர்களில் 64 ரன்களை கொடுத்து ஆஸ்திரேலியாவை 288 என்ற ரன்களுக்கு கொண்டு சென்றது இந்திய அணி. இந்தியாவின் இர்பதான் 61 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் ஆடிய இந்திய அணி வழக்கமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் தோனிதான் ஆறுதலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தோனி 56 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதேபோல் ரெய்னா, 41 பந்துகளை சந்தித்து 28 ரன்களை எடுத்திருந்தார். 43.3 வது ஓவரில் 178 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி தோல்வியடை சந்தித்தது..
ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹில்பெனால் 5 விக்கெட்டுகளையும் பிரெட்லீ 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். புள்ளிகள் பட்டியலில் இதுவரை இந்திய அணி முதலிடத்தில் இருந்தது. இன்றைய வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கடைசி டெஸ்டிலும் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைத்தது, இந்தியா 3–வது நாளிலேயே பணிந்தது ஆஸ்திரேலியா
» பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்: 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி
» இலங்கை அபார வெற்றி!
» இந்திய அணி மேலதிக புள்ளியுடன் அபார வெற்றி: விராத் கோலி 133 ஓட்டங்கள்
» கடைசி டெஸ்டிலும் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைத்தது, இந்தியா 3–வது நாளிலேயே பணிந்தது ஆஸ்திரேலியா
» பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்: 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி
» இலங்கை அபார வெற்றி!
» இந்திய அணி மேலதிக புள்ளியுடன் அபார வெற்றி: விராத் கோலி 133 ஓட்டங்கள்
» கடைசி டெஸ்டிலும் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைத்தது, இந்தியா 3–வது நாளிலேயே பணிந்தது ஆஸ்திரேலியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum