இந்திய அணியில் மீண்டும் விளையாடுவதே என் இலட்சியம்: யுவராஜ் சிங்
Page 1 of 1
இந்திய அணியில் மீண்டும் விளையாடுவதே என் இலட்சியம்: யுவராஜ் சிங்
நுரையீரல் பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் 3 கட்ட ஹீமோதெரபி சிகிச்சை பெற்று கடந்த திங்கட்கிழமை நாடு திரும்பபியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான 30 வயதான யுவராஜ்சிங். வீடு திரும்பிய பின்னர் யுவராஜ்சிங் முதல்முறையாக தனது சொந்த ஊரான குர்கானில் நேற்றையதினம் (11/04/2012) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
மீண்டும் எனக்கு வாழ்க்கை அளித்த கடவுளுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டு இருக்கிறேன். நோயின் பாதிப்பில் இருந்து விடுபட்டு நாடு திரும்பியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் விரைவில் களம் திரும்ப வேண்டும் என்று எனது ரசிகர்கள் அனைவரும் விரும்புகிறார்கள்.
பழைய நிலைக்கு திரும்ப எனது உடல் சில காலங்கள் எடுத்து கொள்ளும் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன். உடல் நலனில் நான் கவனம் செலுத்த வேண்டியது இருக்கிறது. 2 மாதங்களுக்கு பிறகு முடிந்த வரை சீக்கிரம் களம் திரும்ப முயற்சிப்பேன். கடினமான நேரத்தை நான் கடந்து வந்து இருக்கிறேன்.
எனது தாயார் என்னுடன் இருப்பது எனக்கு மிகப்பெரிய பலமாகும். அவர் இல்லாமல் இந்த கஷ்ட காலத்தை கடப்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. சிகிச்சை பெற்ற இந்த 2 மாத காலக்கட்டத்தில் அவர் தனது சோகத்தை மறைத்து கொண்டதுடன், கண்ணீர் கூட சிந்தவில்லை. அதிகாலையில் நான் இருமினாலோ அல்லது தும்மினாலோ உடனே எழுந்து வந்து என்னை பார்ப்பார். சில சமயம் நான் சிறுகுழந்தை போல் அழுவேன். அப்போது அவர் என்னை தேற்றுவார். அவர் என்னை விட மனவலிமை மிக்கவராக இருந்தார் என உருக்கமாக தெரிவித்தார்.
மேலும்,வருங்காலத்தில் நான் என்ன செய்வேன் என்பது எனக்கு தெரியாது. இந்திய அணியின் சின்னத்தை மறுபடியும் அணிந்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பதையே எனது வாழ்நாள் லட்சியமாக கருதுகிறேன் என்று தெரிவித்தார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இந்திய அணியில் மீண்டும் விளையாடுவதே என் இலட்சியம்: யுவராஜ் சிங்
» கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆட்டநாயகன் விருதை அர்ப்பணித்த யுவராஜ் சிங்!
» யுவராஜ் சிங் அழுததும் நானும் அழுதுவிட்டேன்: ஷில்பா ஷெட்டி
» அசுர வேகத்தில் லம்போர்கினி ஓட்டி அசத்திய யுவராஜ் சிங்! (படம் இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum