தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் – அரை‌யிறு‌தி‌யி‌ல் சாய்னா!

Go down

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் – அரை‌யிறு‌தி‌யி‌ல் சாய்னா! Empty உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் – அரை‌யிறு‌தி‌யி‌ல் சாய்னா!

Post  meenu Sun Mar 17, 2013 1:05 pm



0


sainaசீனாவின் ஷென்கென் நகரில் நடந்து வரு‌ம் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போ‌ட்டி‌யி‌ன் அரைய‌ிறு‌தி சு‌ற்று‌க்கு இ‌ந்‌தியா‌வி‌ன் சா‌ய்னா அ‌தி‌‌‌ர்‌‌ஷ்டவசமாக தகு‌தி பெ‌ற்று‌ள்ளா‌ர்.

பெண்கள் பிரிவில் பங்கேற்ற 8 முன்னணி வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதினர். ‘பி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால், முதல் இரு ஆட்டங்களில் தோற்றதால் அரை‌யிறுதி வாய்ப்பு கேள்விக்குறியானது.

இந்த நிலையில் நேற்று நடந்த கடைசி லீக் ஆ‌ட்ட‌த்‌தி‌ல் ஜெர்மனியின் ஜூலியானே ஸ்செங்குடன் மோதினார் சா‌ய்னா. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாய்னா 21-7, 21-18 என்ற நேர் செட்டில் ஜூலியாவை தோற்கடித்தார். இரு செட்டிலும் எதிராளி முன்னிலை பெற எந்த ஒரு வாய்ப்பையும் வழங்காத சாய்னா 37 நிமிடங்களில் வெற்றியை ருசித்தார்.

இருப்பினும் தாய்லாந்தின் ராட்சானோக் இன்தானோ-டென்மார்க்கின் டினே பான் இடையிலான மற்றொரு ஆட்டத்தில் சாதகமான முடிவு கிடைத்தால் மட்டுமே சாய்னாவுக்கு அரை‌யிறுதி வாய்ப்பு கிடைக்கும் சூழல் நிலவியது.

அதிர்ஷ்டவசமாக ராட்சானோக் தனது கடைசி ஆட்டத்தில் 21-15, 21-14 என்ற நேர் செட்டில் டினே பானை வீழ்த்தியதால் சாய்னாவுக்கு அரை‌‌யிறுதி வாய்ப்பு கிட்டியது.

லீக் முடிவில் ராட்சானோக் மூன்று வெற்றிகளுடன் அரை‌யிறுதியை உறுதி செய்தார். சாய்னா, டினே பான், ஜூலியானே ஆகியோர் தலா ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து செட் அடிப்படையில் பார்த்த போது, சாய்னா முந்தினார்.

அதாவது சாய்னா 3 ஆட்டங்களிலும் 3 செட்டை வென்று, 4 செட்டுகளை இழந்திருந்தார். ஆனால் டினே பான் 3 செட்டை வென்று, 5 செட்டுகளையும், ஜூலியானே 2 செட்டுகளை வென்று, 5 செட்டுகளை இழந்திருந்தனர். இதன் மூலம் சாய்னா அரை‌யிறுதி வாய்ப்பை தட்டிச்சென்றார்.

4ஆம் நிலை வீராங்கனையான சாய்னா இன்று நடக்கும் அரை‌யிறுதியில் போட்டி தரநிலையில் முதலிடம் வகிக்கும் சீனாவின் சூய்ருய் லீயை சந்திக்கிறார். ஒலிம்பிக் சாம்பியனான சூய்ருய் லீக்கு எதிராக இதுவரை 6 முறை மோதியுள்ள சாய்னா அதில் 2இல் மட்டுமே வெற்றி பெற்றிரு‌க்‌கிறா‌ர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum