சீன பேட்மிண்டன் அணி ஒலிம்பிக்கில் சூதாட்டமா?
Page 1 of 1
சீன பேட்மிண்டன் அணி ஒலிம்பிக்கில் சூதாட்டமா?
0
ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில், விதிமுறைகளை மீறிய விளையாடியதற்காக சீன பேட்மிண்டன் அணி மன்னிப்பு கோரியது. பெண்களுக்கான இரட்டையர் பேட்மிண்டன் தகுதிச்சுற்றில் சீனாவின் நான்கு வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் யூ யாங் மற்றும் வாங் சியோலி கலந்து கொண்ட இரட்டையர் போட்டியில் வேண்டுமென்றே தோற்கும் நோக்கத்தில் விளையாடியுள்ளனர். அடுத்த சுற்றில் அவர்களுக்கு சாதகமான சூழல் அமையும் என்ற நோக்கில் விதிமுறைகளை மீறி அவ்வாறு நடந்து கொண்டதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து அவர்கள் பங்கேற்ற போட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் சீன வீராங்கனைகள் செய்த தவறை ஒத்துக்கொண்ட சீனா பாட்மிண்டன் தலைமை பயிற்சியாளர் லி யாங்போ, மன்னிப்பு கோரினார். ஒவ்வொரு விளையாட்டிலும் சிரத்தையுடனும், அக்கறையுடனும் அவர்கள் விளையாடியிருக்க வேண்டும். ஆனால் ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கான உற்சாகத்துடனும், வேகத்துடனும், வலிமையுடனும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் விளையாடவில்லை.
இந்த விஷயத்தில் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். இதுதொடர்பாக சீனாவின் ரசிகர்கள் மற்றும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று யாங்போ கூறினார்.
இதற்கிடையே தனது தவறை ஏற்றுக்கொண்ட சீன வீராங்கனை யூ யாங் தனது இறுதி விளையாட்டில் விளையாடுவதாகவும், பின்னர் விளையாட்டு போட்டியிலிருந்து ஓய்வு பெறப் போவதாகவும் இணையதள செய்தியில் கூறியுள்ளார்.
மற்றொரு வீராங்கனை வாங் சியோலி, ரசிகர்களின் நம்பிக்கையை பெறும் விதத்தில், மேலும் சிறப்பாக விளையாடி திறமையை நிரூபிப்பேன் என்று கூறியுள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பேட்மிண்டன் போட்டியில் ஷாலினி தோல்வி
» உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் – அரையிறுதியில் சாய்னா!
» டாக்டரானார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா! (படங்கள்)
» ஒலிம்பிக்கில் ரஹ்மான் இசை
» ஒலிம்பிக்கில் இதுவரை வெல்லப்பட்ட பதக்க நிலவரங்கள்!
» உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் – அரையிறுதியில் சாய்னா!
» டாக்டரானார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா! (படங்கள்)
» ஒலிம்பிக்கில் ரஹ்மான் இசை
» ஒலிம்பிக்கில் இதுவரை வெல்லப்பட்ட பதக்க நிலவரங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum