தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘கடல்’ வெளியீட்டில் ஜெமினி நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கு தொடர்பில்லை: மெட்ராஸ் டாக்கீஸ்

Go down

‘கடல்’ வெளியீட்டில் ஜெமினி நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கு தொடர்பில்லை: மெட்ராஸ் டாக்கீஸ் Empty ‘கடல்’ வெளியீட்டில் ஜெமினி நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கு தொடர்பில்லை: மெட்ராஸ் டாக்கீஸ்

Post  ishwarya Sat Mar 16, 2013 4:08 pm


மணிரத்னம் இயக்கிய 'கடல்' படம் தியேட்டர்களில் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து மணிரத்னத்திடம் தொடர்ந்து நஷ்டஈடு கேட்டும் வற்புறுத்தினர். இந்நிலையில் நேற்று, அடையாறு கிரீன்வேஸ் ரோட்டில் மணிரத்னம் வீடு மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தை விநியோகஸ்தர்கள் பலர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும், அலுவலகத்தில் நுழைந்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோஷம் போட்டனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘கடல்’ திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெளியீட்டு உரிமைகளை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதமே ஜெமினி இன்டஸ்ட்ரிஸ் மற்றும் இமேஜிங் லிமிடெட் நிறுவனத்திற்கு மினிமம் காரண்டி அடிப்படையில் விற்றுவிட்டது.

இந்தப் பட வெளியீட்டிற்காக ஜெமினி நிறுவனம் செய்து கொண்டிருக்கக்கூடும் ஒப்பந்தங்களுக்கும் மெட்ராஸ் டாக்கீஸிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது சம்பந்தமாக வேறெந்த நபரையும் மெட்ராஸ் டாக்கீஸ் அணுகவில்லை.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
tamil matrimony_INNER_468x60.gif

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum