காதல் மன்னன் ஜெமினி கணேசனின் கலை வாரிசு!
Page 1 of 1

காதல் இளவரசர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் காதல் மன்னன் ஒருவர் மட்டுமே. அவர்தான் ஜெமினிகணேசன். அறுபதை தாண்டிய பின்பும் தனக்கென்று ஒரு காதலியை தேடிக் கொள்ளும் அவரது ஊசலாடுகிற மனசு ஒரு ஹீரோவுக்கும் வாய்த்ததில்லை. காதல் விஷயத்தில் அவரை போலிருக்க வேண்டாம். ஆனால் கலை விஷயத்தில் அவரை பின் தொடர வேண்டும் என்று அவரது வாரிசுகளை அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறது திரையுலகம். அதற்கு உதாரணம்தான் பாலிவுட் ரேகா… ‘நினைவெல்லாம் நித்யா’ ஜீஜி, இதோ- நீண்ட இடைவெளிக்குப் பின் அபிநய்.
இவர் காதல் மன்னன் ஜெமினி கணேசன், சாவித்ரி தம்பதியின் பேரன். இவர் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படம்தான் ‘வினை’. தமிழில் இவர் நடித்து வெளிவரப்போகும் முதல் படம் இதுதான். அடிப்படையில் இசைக்குழு வைத்திருக்கும் நால்வர் ஒரு பாடகியுடன் மலேசியா செல்கிறார்கள். சில தினங்களில் இந்த நால்வரும் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். கொல்வது யார் ஏன் என்ற கேள்வியோடு விறுவிறுப்பாக நகருமாம் படம்.
இந்த படம் முழுக்க மலேசியாவில்தான் படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் இந்தியாவிலும் மலேசியாவிலும் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அபிநய்யை எப்படி தேர்ந்தெடுத்தார் டைரக்டர் பாலசுதன் என்றால் அதுவே பெரிய கதையாக இருக்கிறது. ஒரு விறுவிறுப்பான கதையை தயார் செய்துவிட்டு சென்னைக்கு வந்திறங்கியவர், இங்குதான் ஹீரோ தேடும் படலத்தையே ஆரம்பித்தார். அப்போதுதான் சினிமா டைரி ஒன்றில் அபிநய்யின் புகைப்படத்தை பார்க்க நேர்ந்தது. பார்த்தவுடன் பிடித்துப் போகிற முகமாக இருந்ததால் உடனே அவரது செல்போனில் தொடர்பு கொண்டு வரவழைத்தாராம். வந்த பிறகுதான் தெரிந்ததாம் அவர்தான் காதல் மன்னன் ஜெமினியின் வாரிசு என்று.
அப்புறமென்ன பெருமையோடு அறிமுகப்படுத்தி விட்டார்கள் அவரை. அபிநய்க்கு ஜோடியாக பிரதிக்ஷா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். சித்தார்த் யுவராஜ் இசையமைத்திருக்கிறார்கள். உரூஜ் புரடக்ஷன்ஸ் சார்பாக அப்துல் அஜீஸ் தயாரித்திருக்கிறார். சில ஹீரோக்களின் அறிமுகம் தமிழ்சினிமாவில் எதிர்வினையை ஏற்படுத்தும். ‘வினை’ படத்தின் மூலம் அறிமுகமாகும் அபிநய் நேர்வினையை ஏற்படுத்துவார் என்று நம்புவோம்.
வினை யார விட்டுச்சு…?!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நான் ரஜினி வாரிசு இல்லை – கஸ்தூரிராஜாவின் வாரிசு: தனுஷ்
» கடலையே விலைக்கு வாங்கிய ஜெமினி!
» எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் சில இனிய நினைவுகள்
» ‘கடல்’ வெளியீட்டில் ஜெமினி நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கு தொடர்பில்லை: மெட்ராஸ் டாக்கீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum