தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமெரிக்க காதலரை மணக்கிறார் நடிகை அசின்?

Go down

அமெரிக்க காதலரை மணக்கிறார் நடிகை அசின்? Empty அமெரிக்க காதலரை மணக்கிறார் நடிகை அசின்?

Post  ishwarya Sat Mar 16, 2013 12:48 pm

மலையாள படவுலகில் இருந்து தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் அசின். தமிழில் முன்னணி நடிகையாக வலம்வந்த இவருக்கு பாலிவுட்டிலும் நடிக்க வாய்ப்புகள் வந்தது.

இந்தியில் அமீர்கான், சல்மான்கான் என பாலிவுட் ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்து இவர் நடித்த படங்கள் வசூலை வாரிக்குவித்தன. இதையடுத்து அசினுக்கு பாலிவுட்டில் நடிக்க நிறைய வாய்ப்பு வந்தது.

ஆனால், சமீபகாலமாக புதியபட வாய்ப்புகள் எதையும் ஏற்காமல் தவிர்த்து வந்தார். இதற்கு காரணம், அமெரிக்க வாலிபர் ஒருவரை அசின் காதலிப்பதாகவும், விரைவில் அவரை மணக்க உள்ளதால்தான் புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்வதில்லை எனவும் பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களில் மட்டும் அசின் பலமுறை அமெரிக்கா சென்றிருப்பதாகவும், அப்போது, அவர் காதலனுடன் மனம் விட்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. சீக்கிரமே திருமண ஏற்பாடுகள் நடைபெற இருப்பதனாலேயே படவாய்ப்புகளை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

அசினை தமிழில் மட்டும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க வைக்க பேசி வருகிறார்கள். இந்த படத்தில் நடித்துவிட்டு திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட திட்டமிட்டிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum