தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமெரிக்க காதலருடன் திருமணமா?- அசின் விளக்கம்

Go down

அமெரிக்க காதலருடன் திருமணமா?- அசின் விளக்கம் Empty அமெரிக்க காதலருடன் திருமணமா?- அசின் விளக்கம்

Post  ishwarya Sat Mar 16, 2013 12:20 pm

நடிகை அசின் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய இளைஞர் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் பரவின.

அசின் இந்திப் படங்களில் நடிப்பதால் உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்தியில் இதுவரை 6 படங்களில் நடித்துள்ளார். இதில் 4 படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளன. இதனால் இந்தியில் முன்னணி நடிகையாகி உள்ளார். அங்குள்ள ஹீரோக்களுடன் அசினை இணைத்து கிசுகிசுக்களும் வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில்தான் அமெரிக்கா காதலன் பற்றிய விஷயம் அம்பலமானது. அசின் கடந்த சில மாதங்களில் அடிக்கடி அமெரிக்கா சென்று வந்துள்ளார். காதலனை சந்திப்பதற்காகவே அவர் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்தியில் புதுப்படங்களை எதிலும் அசின் ஒப்பந்தமாகவில்லை. நிறைய இயக்குனர்கள் கதைகளுடன் அவரை அணுகிறார்கள். ஆனால் எந்த படத்தையும் ஏற்கவில்லை. அமெரிக்கா காதலரை திருமணம் செய்து கொள்வதற்காகவே படங்களில் நடிப்பதை நிறுத்தி உள்ளார் என்றும் தகவல் பரவி உள்ளது.

இதற்கு அசின் சார்பில் அவரது உதவியாளர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ''அசினுக்கு அமெரிக்க காதலர் இருப்பதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்பதையும் மறுக்கிறோம். அசினின் முழுகவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. அசினுக்கு இப்போது திருமணம் இல்லை'' என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum