தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தொழிலதிபரை மணக்கிறார் நடிகை பூஜா காந்தி

Go down

 தொழிலதிபரை மணக்கிறார் நடிகை பூஜா காந்தி Empty தொழிலதிபரை மணக்கிறார் நடிகை பூஜா காந்தி

Post  ishwarya Sat Mar 23, 2013 2:41 pm



தொழிலதிபர் ஆனந்த் கெüடாவுடன் கன்னட நடிகை பூஜா காந்திக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

"முங்காரு மளே' திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் கால் பதித்த நடிகை பூஜா காந்தி, 20-க்கும் மேற்பட்ட கன்னடப் படங்களில் நடித்துள்ளார். பெங்களூர் கத்திரிகுப்பேயில் அமைந்துள்ள பூஜா காந்தி இல்லத்தில் வியாழக்கிழமை அவருக்கும், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஆனந்த் கெüடாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பூஜா காந்தி, ஏற்கெனவே உறுதி அளித்தப்படி கன்னடரான ஆனந்த் கெüடாவை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். ஆனால், ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ள ஆனந்த் கெüடாவை திருமணம் செய்ய பூஜா காந்தி முடிவு செய்துள்ளது, கன்னட திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால், அண்மையில் மஜதவில் இணைந்த பூஜா காந்தி, திருமணத்துக்குப் பிறகு அரசியலில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum