படப்பிடிப்பில் நடிகை அஞ்சலியை மின்சாரம் தாக்கியது: ஆஸ்பத்திரியில் சிகிச்சை
Page 1 of 1

டைரக்டர் மு.களஞ்சியம் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்யும் புதிய படம் 'ஊர் சுற்றி புராணம்'. இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக திருப்போரூர் வடக்கு மாடவீதியில் உள்ள தனியார் சத்திரத்தில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புக்காக சத்திரத்தில் ஓட்டல் செட் போடப்பட்டிருந்தது.
நேற்று களஞ்சியம் மற்றும் அஞ்சலி சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன. வாசற்படிக்கட்டில் இருந்து அஞ்சலி வீட்டின் உள்ளே வருவதுபோன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக அஞ்சலி செருப்பு அணியாமல் உள்ளே நடத்து வந்தார்.
அப்போது ஜெனரேட்டருக்கு செல்லும் மின்சார ஒயரில் இருந்து மின்சாரம் கசிந்துக் கொண்டிருப்பதை யாரும் கவனிக்கவில்லை. வீட்டின் உள்ளே நடந்து வந்த அஞ்சலி தற்செயலாக ஒயர் மீது கால் வைத்தவுடன் மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசியெறியப்பட்டு அவர் மயங்கி கீழே விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த படப்பிடிப்புக் குழுவினர் செய்வதறியாது திகைத்தனர். இயக்குனர் களஞ்சியம் ஓடி வந்து நடிகை அஞ்சலியை திருப்போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். இங்கு அஞ்சலிக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு கண் விழித்த அஞ்சலி பின்னர் அங்கிருந்து படபிடிப்பு நடந்த இடத்திற்கு நடிக்க வந்தார். ஆனால் படபிடிப்பு நிறுத்தப்பட்டதாக இயக்குனர் களஞ்சியம் அறிவித்ததை தொடர்ந்து காரில் ஏறி நடிகை அஞ்சலி சென்னை சென்றார்.
இதுகுறித்து இயக்குனர் மு.களஞ்சியம் கூறியதாவது:-
மின் ஒயர் பிய்ந்து கிடந்ததை கவனிக்காமல் அதன் மீது நடிகை அஞ்சலி கால் வைத்து விட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு மூர்ச்சையானார். மருத்துவ சிகிச்சைக்குபின் நலம் அடைந்தார் தற்போது நலமோடு இருக்கிறார். வரும் திங்கள் வழக்கம் போல் படபிடிப்பு நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» படப்பிடிப்பு தளத்தில் நடிகை அஞ்சலிக்கு மின்சாரம் தாக்கியது
» நடிகை அஞ்சலியை கண்டுபிடிக்ககோரி சென்னை ஐகோர்ட்டில் சித்தி மனு
» நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது
» நடிகை அஞ்சலியை கடத்தி விட்டனர்: போலீஸ் கமிஷனரிடம் சித்தி புகார்
» மின்சாரம் தாக்கி விபத்து: நடிகை அஞ்சலி கால் வீங்கியது- படப்பிடிப்பு மீண்டும் ரத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum