தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Go down

நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது Empty நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post  ishwarya Sat May 04, 2013 5:15 pm

நடிகை அஞ்சலி வீட்டை விட்டு வெளியேறி தனது சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோர் மீது பரபரப்பு புகார் கூறினார். சொத்து, பணத்தை சித்தி பாரதிதேவி அபகரித்து விட்டதாகவும் அவருக்கு உடந்தையாக டைரக்டர் களஞ்சியம் இருக்கிறார் என்றும் கூறினார்.

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சென்னைக்கு வரமாட்டேன் என்றும், ஐதராபாத்தில் குடியேறி விட்டேன் என்றும் தெரிவித்தார். டைரக்டர் களஞ்சியம் இதனை மறுத்தார். அஞ்சலி பணத்தை அபகரித்ததாக சொல்வது பச்சை பொய். அவரது சொந்த விஷயங்களில் நான் தலையிட வில்லை என்றார்.

தன் மீது அவதூறு பரப்பிய அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தி போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்தார். இதற்கிடையில் நடிகை அஞ்சலியை காணவில்லை என்று அவரது அண்ணன் ரவி சங்கர் ஆந்திர மாநிலம் ஜுப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். அஞ்சலியை யாரேனும் கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று விசாரணையை துவங்கினர். ஐதராபாத் மாதாபூரில் அஞ்சலி தங்கி இருந்த தஸ்பல்லா ஓட்டலுக்கு சென்று விசாரித்தார்கள். அறையில் அஞ்சலி இல்லை. அங்கிருந்த கண் காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்கள். அதில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு அஞ்சலியும் அவரது சித்தப்பா சூரிபாபுவும் ஓட்டலுக்குள் செல்வது பதிவாகி இருந்தது. மறுநாள் திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு ஜீன்ஸ் பேன்ட் டீசர்ட்டில் அஞ்சலி ஓட்டல் அறையை விட்டு வெளியே வேகமாக வரும் காட்சிகள் இருந்தன.

தோளில் ஒரு பையை தொங்கவிட்டு இருந்தார். செல்போனில் பேசிய படியே வெளியே சென்றார். ஓட்டல் வாசலில் இன்டிகா கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அந்த காருக்குள் அஞ்சலி தாவி ஏறிக் கொண்டார். காரின் பின் இருக்கையில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். அவரது முழு உருவமும் கேமராவில் தெளிவாக தெரியவில்லை. பின்னர் மின்னல் வேகத்தில் கார் அங்கிருந்து பறந்தது. துரதிர்ஷ்டவசமாக கார் நம்பரும் கேமராவில் பதிவாகவில்லை.

காரில் இருந்த மர்மநபர் தான் அஞ்சலியை கடத்தி இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. தோள் பையை அழுத்தி பிடித்தபடி சென்றதால் அதற்குள் பணம், நகைகள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வெளி நாட்டுக்கு போய் விட்டாரா என்று பாஸ்போர்ட்டையும் ஆய்வு செய்கிறார்கள். அஞ்சலி கடத்தப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

ஏற்கனவே இரண்டு தடவை காதல் வயப்பட்டு அஞ்சலி வீட்டை விட்டு ஓடியதாகவும் அதை தடுத்து விட்டதாகவும் அவரது சித்தி பாரதிதேவி கூறியுள்ளார். எனவே எவரையேனும் காதலித்து அவருடன் ஓடிவிட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது. சென்னையிலும் விசாரணை நடத்த ஆந்திர போலீசார் வருகிறார்கள்.

தெலுங்கில் ரவிதேஜா ஜோடியாக பலுவு படத்திலும், வெங்கடேஷ் ஜோடியாக இன்னொரு படத்திலும் அஞ்சலி நடித்து வந்தார். அவர் மாயமானதால் இரு படங்களின் படப்பிடிப்புகளும் முடங்கி உள்ளன. படக்குழுவினர் அஞ்சலியை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை அஞ்சலியை கடத்தி விட்டனர்: போலீஸ் கமிஷனரிடம் சித்தி புகார்
» டிங்குடன் 2வது திருமணம் : நடிகை கவிதா தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
» நடிகை அஞ்சலியை கண்டுபிடிக்ககோரி சென்னை ஐகோர்ட்டில் சித்தி மனு
» படப்பிடிப்பில் நடிகை அஞ்சலியை மின்சாரம் தாக்கியது: ஆஸ்பத்திரியில் சிகிச்சை
» நடிகை அஞ்சலி மீது டைரக்டர் களஞ்சியம் போலீஸ் கமிஷனரிடம் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum