என் படத்துக்கு ஸ்ரேயாவின் அழகு தேவைப்படவில்லை : தீபா மேத்தா பேட்டி
Page 1 of 1
என் படத்துக்கு ஸ்ரேயாவின் அழகு தேவைப்படவில்லை : தீபா மேத்தா பேட்டி
ஹீரோயின் ஸ்ரேயாவின் அழகு என் கதைக்கு தேவைப்படவில்லை என்றார் பெண் இயக்குனர் தீபா மேத்தா. சர்ச்சைக்குரிய ஃபயர், எர்த், வாட்டர் படங்களை இயக்கிய பெண் இயக்குனர் தீபா மேத்தா. அடுத்ததாக, அவர் இயக்கியுள்ள படம் மிட்நைட்ஸ் சில்ட்ரன். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின்போது இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது நடந்த சம்பவங்களை மையமாக வைத்து ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன் படத்தை அவர் இயக்கி இருக்கிறார். இப்படம் சர்ச்சையை கிளப்பி உள்ளதுடன் படத்தை திரையிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் கேரளாவில் போராட்டம் நடத்தினர். இப்படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரேயா நடித்திருக்கிறார். ஸ்ரேயாவின் நடிப்பு பற்றி தீபா மேத்தா கூறும்போது, ‘ஸ்ரேயா நல்ல நடிகை. அவரது அழகுபற்றி எனக்கு தெரியும். ஆனால் இப்படத்தில் அவரது அழகு தேவைப்படவில்லை. அழுத்தமான நடிப்பு தேவைப்பட்டது. இதை அவரிடம் சொன்னபோது உடனே புரிந்துகொண்டார். பார்வதி என்ற கதாபாத்திரத்தை ஏற்று ஆழமான நடிப்பை வெளியிட்டிருக்கிறார். இப்பாத்திரத்தை சவாலாக ஏற்றுக்கொண்டு நடித்தார். அதை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் மிகவும் இனிமையானவர் என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒரு படத்துக்கு 1 வருட அவகாசம் ஏன்? விக்ரம் பேட்டி
» விஸ்வரூபம் படத்துக்கு தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது: நடிகர் மகேஷ்பாபு பேட்டி
» லைப் ஆப் பை படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது மகிழ்ச்சி: புதுவை மாணவன் பேட்டி
» தீபா ஒரு விளம்பரப் பிரியை : ஓவியா
» ஓவியா-தீபா சண்டை ஓய்ந்ததாம்
» விஸ்வரூபம் படத்துக்கு தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது: நடிகர் மகேஷ்பாபு பேட்டி
» லைப் ஆப் பை படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது மகிழ்ச்சி: புதுவை மாணவன் பேட்டி
» தீபா ஒரு விளம்பரப் பிரியை : ஓவியா
» ஓவியா-தீபா சண்டை ஓய்ந்ததாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum