நம்பர் ஒன் நடிகை சமந்தா விளக்கம்
Page 1 of 1
நம்பர் ஒன் நடிகை சமந்தா விளக்கம்
சென்னை : பணத்தையும் படத்தையும் தட்டிப் பறிக்காதவர்களே நம்பர் ஒன் நடிகை என்று சமந்தா கூறினார். சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நான் நடித்துள்ள ‘நீதானே என் பொன்வசந்தம்’, தமிழிலும், தெலுங்கிலும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது. நித்யா கேரக்டர் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. என் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை மனதில் வைத்துக் கொண்டு அந்த கேரக்டரில் நடித்தேன். பள்ளி பருவத்திலும், கல்லூரியில் படிக்கும்போதும் எனக்கு காதல் வந்திருக்கிறது. ஆனால் அது சீரியசானது இல்லை.
தமிழை விட தெலுங்குக்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன். அங்குள்ள ரசிகர்கள் என்னை மிகவும் நேசிக்கிறார்கள், ரசிக்கிறார்கள். தெலுங்கில் நான்தான் நம்பர் ஒன் என்பதை ஏற்க மாட்டேன். நம்பர் ஒன் என்பது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாறும். யாருடைய பணத்தையும், படத்தையும் நான் தட்டிப் பறித்தது இல்லை. அப்படிச் செய்யாதவர்கள்தான் நம்பர் ஒன். அந்த வகையில் என்னை நம்பர் ஒன்னாக நினைத்தால் சந்தோஷம். கவுதம் மேனன் படத்தில் நான் தொடர்ந்து நடிப்பதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அவர் உருவாக்கும் கேரக்டருக்கு என்னை பொருத்தமானவளாக நினைக்கிறார். வாய்ப்பு தருகிறார். அந்த கேரக்டருக்கு உண்மையாக உழைக்கிறேன். அதைத் தாண்டி எதுவும் இல்லை.
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்பட்டதால் இரண்டு மாதங்கள் ஓய்வெடுத்தேன். அப்போது ‘ஐ’, ‘கடல்’ பட வாய்ப்புகள் வந்தது. அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதற்காக வருந்தவில்லை. நடந்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவள் அல்ல நான். நடக்கப்போவதை பற்றி சிந்திப்பவள். இன்னும் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கிறது. வருங்காலத்தில் அவர்கள் படத்தில் நடிக்காமலா போய்விடுவேன்? இந்திப் படத்தில் நடிக்கும் ஆர்வம் இல்லை. நான் தென்னிந்திய பெண். தென்னிந்திய மொழிகள்தான் எனக்கு சவுகரியமாக இருக்கும். இங்கே சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. இவ்வாறு சமந்தா கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நம்பர் ஒன் நடிகை என்பதில் எந்த பெருமையும் இல்லை : சமந்தா பேட்டி
» இப்போதுள்ள நடிகைகளில் யாரும் நம்பர்-1 கதாநாயகி அல்ல: சமந்தா
» சித்தார்த்துடன் காதலா? -சமந்தா விளக்கம்
» நடிகை சமந்தா நடிக்கும் 'நான் ஈ'
» நான் தலைக்கனம் பிடித்த நடிகை அல்ல: சமந்தா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum