இப்போதுள்ள நடிகைகளில் யாரும் நம்பர்-1 கதாநாயகி அல்ல: சமந்தா
Page 1 of 1

‘நான் ஈ’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை சமந்தா. இவர் நேற்று ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியதாவது:
‘தமிழ் சினிமாவில்தான் (மாஸ்கோவின் காவேரி) நான் முதன்முதலாக அறிமுகமானேன். அப்போது எனக்கு அனுபவம் போதாது. புது நடிகை என்பதால் கதைகளை தேர்வு செய்ய தெரியவில்லை. கிடைக்கிற படங்களில் எல்லாம் நடிக்க ஆரம்பித்தேன்.
தெலுங்கு பட உலகம்தான் என்னை அடையாளம் கண்டு, நல்ல வேடங்களை கொடுத்தது. அதனால்தான் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். ‘நம்பர் 1′நடிகை என்பதில், எனக்கு உடன்பாடு இல்லை. வெள்ளிக்கிழமைதோறும் புது படங்கள் ‘ரிலீஸ்’ஆகின்றன. அதில், யாருடைய படம் வெற்றி பெறுகிறதோ, அவர்தான் ‘நம்பர்&1′நடிகை. அது, யாருக்கும் நிரந்தரம் கிடையாது. அடுத்தவர்களை கெடுக்காத நல்ல மனது இருந்தால் போதும். அவரை, ‘நம்பர்-1′ என்று அழைக்கலாம்.
கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்ஷனில், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’(தெலுங்கு) படத்திலும், ‘நீதானே என் பொன் வசந்தம்’படத்திலும் நடித்ததற்கு, அந்த வேடங்கள் எனக்கு பொருத்தமாக இருந்ததுதான் காரணம். அதைத்தவிர வேறு எதுவும் இல்லை. பள்ளிக்கூட பருவத்திலும், கல்லூரி பருவத்திலும் நான் காதலித்து இருக்கிறேன். ஆனால் அது ‘சீரியஸ்’ஆன காதல் இல்லை. அந்த சமயங்களில் என் மனதுக்கு பிடித்து இருந்தது. அவ்வளவுதான். இப்போது யாரையும் காதலிக்கவில்லை.
மணிரத்னத்தின் ‘கடல்,’ஷங்கரின் ‘ஐ’ஆகிய இரண்டு படங்களையும் நான் தவறவிட்டு விட்டேன். அந்த நேரத்தில், நோய் எதிர்ப்பு சக்தி எனக்கு குறைவாக இருந்ததால், இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டியதாகி விட்டது. அதற்காக வருத்தப்படவில்லை. எப்போதுமே நடந்து முடிந்ததை நினைத்து நான் வருத்தப்படுவதில்லை. நடக்கப்போவது பற்றியே சிந்திப்பேன். மணிரத்னம் படத்திலும், ஷங்கர் படத்திலும் வருங்காலத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தி படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வந்தது. விருப்பம் இல்லாததால், நடிக்கவில்லை.
இவ்வாறு சமந்தா கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நம்பர் ஒன் நடிகை சமந்தா விளக்கம்
» நம்பர் ஒன் நடிகை என்பதில் எந்த பெருமையும் இல்லை : சமந்தா பேட்டி
» நான் தலைக்கனம் பிடித்த நடிகை அல்ல: சமந்தா
» தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நல்ல நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் பாவனா.
» "உ" படக்குழுவினரை தவிக்கவிட்ட கதாநாயகி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum