தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சினிமாவில் மகளை அறிமுகப்படுத்த நடிகர்கள் தயங்கக் கூடாது: அர்ஜுன்

Go down

சினிமாவில் மகளை அறிமுகப்படுத்த நடிகர்கள் தயங்கக் கூடாது: அர்ஜுன்  Empty சினிமாவில் மகளை அறிமுகப்படுத்த நடிகர்கள் தயங்கக் கூடாது: அர்ஜுன்

Post  ishwarya Wed Mar 13, 2013 5:48 pm

சென்னை : நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா, ‘பட்டத்துயானை’ என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அவரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் அர்ஜுன் பேசியதாவது: நான் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனக்கு பணம், புகழ், நண்பர்களைக் கொடுத்து சாப்பாடும் போட்ட சினிமா துறைக்கு என் மகளை அறிமுகப்படுத்துகிறேன்.

சில நண்பர்கள் வாழ்த்தினார்கள். சில நண்பர்கள், ‘ஆண் பிள்ளையாக இருந்தால் பரவாயில்லை. பெண்ணை அறிமுகப்படுத்துகிறாயே’ என்று சொன்னார்கள். நல்லது, கெட்டது எல்லாத் துறையிலும் இருக்கிறது. அது நாம் நடந்து கொள்வதை பொறுத்தது. சினிமாவில் மகளை அறிமுகப்படுத்த நடிகர்கள் தயங்கக் கூடாது. நாம் தயங்கினால், மற்றவர்கள் யோசிப்பார்கள் என்று அவர்களுக்குச் சொன்னேன். முழு சம்மதத்தோடும், சந்தோஷத்தோடும் என் மகளை அறிமுகப்படுத்துகிறேன்.
இவ்வாறு அர்ஜுன் பேசினார்.

ஐஸ்வர்யா அர்ஜுன் பேசியதாவது: என் தந்தை பெயருக்கு களங்கம் வராதபடி நடந்து கொள்வேன். ஒரு நடிகையாக எனக்கு 100 சதவிகித பொறுப்பு இருக்கிறது. ஒரு நடிகரின் மகள் என்பதால் பத்தாயிரம் சதவிகிதம் பொறுப்பு இருக்கிறது. என் முழு உழைப்பையும் கொடுத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடிப்பேன். இவ்வாறு ஐஸ்வர்யா அர்ஜுன் கூறினார்.நிகழ்ச்சியில் ‘பட்டத்து யானை’ படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், இயக்குனர் பூபதி பாண்டியன், நடிகர் விஷால் கலந்து கொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum