மக்களை சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது: எம்.எஸ்.பாஸ்கர்
Page 1 of 1

காமெடி நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்அளித்த பேட்டி வருமாறு:- கலைஞர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள். நடிகர்களுக்கு அனைத்து கட்சிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். என்னை பொறுத்தவரை காமெடி நடிகர்களுக்கு அரசியல் தேவை இல்லை. அரசியல் என்பது வேறு களம். நடிகர்கள் அரசியல்வாதியாக நடிக்கலாம். கருத்துக்கள் சொல்லலாம்.
ஊழலை எதிர்க்கலாம். ஆனால் அரசியலில் ஈடுபடக் கூடாது. அரசியலில் சேர்ந்தால் பலரது விருப்புக்கும், வெறுப்புக்கும் ஆளாக நேரிடும். அரசியலை விரும்பும் நடிகர்கள் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியல்வாதியாக போய் விட வேண்டும்.
சினிமா நல்ல தொழில். அதில் அரசியலை கலக்க கூடாது. ரசிகர்கள் கைதட்டல் போதும். சத்தியமாக நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். வடிவேலு அரசியலில் ஈடுபட்டதும் பிரசாரம் செய்ததும் அவரது சொந்த விருப்பம். என்.எஸ். கிருஷ்ணன் காலத்தில் இருந்து காமெடி நடிகர்கள் அரசியலில் ஈடுபட வில்லை. காமெடி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக விமர்சிக்கின்றனர்.
எனக்கு ஏழு கோடிகள் தெரியும். கிழக்கு கோடி, மேற்கு கோடி, தெற்கு கோடி, வடக்கு கோடி, புண்ணிய கோடி, தனக்கோடியை பார்த்தாலும் தெருக்கோடியில்தான் நிற்க வைக்கிறார்கள்.
காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. வேலாயுதம், ஒத்த வீடு, கொஞ்சம் மைனாக்களே, புதுமுகங்கள் தேவை, மௌனமான நேரம் உள்ளிட்ட பதி மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மூக்கு உடைந்தது
» காமெடி நடிகர்கள் – காரியதரிசிகள்-காண்டுவாதங்கள்!
» சிரிக்க வைக்கும் சிரிப்புகள்
» சீனியர் நடிகர்கள் ஈகோ பார்க்கக் கூடாது: சத்யராஜ்
» வில்லனாக மாறினார் எம்.எஸ்.பாஸ்கர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum