சீனியர் நடிகர்கள் ஈகோ பார்க்கக் கூடாது: சத்யராஜ்
Page 1 of 1

‘இங்கே சத்யராஜ் வந்திருப்பதாகச் சொன்னாங்க… எங்கே அவர்?,’ என்று ஏவிஎம் ஏசி அரங்கில் யூனிட் ஆள் ஒருவர் தேடிக் கொண்டிருக்க, அவருக்கு பக்கத்து சீட்டிலிருந்து எழுந்தார் ஒரு நபர். மகா இளமையான ஹேர்ஸ்டைல், கண்ணாடி, ஷார்ட் ஷர்ட், ஜீன்ஸில்… அட சத்யராஜ்தான்! கவுண்டமணி சொல்வதுபோல, ‘எந்த கெட்டப் போட்டாலும் அப்படியே பொருந்திப் போகும்’ நடிகர்களில் முதலிடம் சத்யராஜுக்குத்தான். இந்த இளமை கெட்டப் ‘கலவரம்’ படத்துக்காக. சென்ற வாரப் படத்தின் பாடல் வெளியீட்டுக்குப் பின் நடந்த பிரஸ் மீட்டில்தான் இந்த கலாட்டா.
விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, அருண் விஜய் நடித்த ‘ஜனனம்’ போன்ற படங்களை இயக்கிய டி.எஸ்.ரமேஷ் செல்வன் இயக்கும் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் சத்யராஜ். அவருடன் நான்கு இளம் ஜோடிகள் இந்தப் படத்தில் உள்ளனர். அஜய், குட்டி, யாசர், ராகவன் என நான்கு இளைஞர்கள் ஹீரோக்களாக அறிமுகமாகிறார்கள் இந்தப் படத்தில். ஹரிணி, லாவண்யா, ரியா, நிலா நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இவர்களில் நிலா மட்டும்தான் தெரிந்த முகம். தங்கர் பச்சானின் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படத்தில் நடித்தவர் இந்த நிலா.
சுஜிபாலாவும் படத்தில் உண்டு. நேர்மையான போலீஸ் அதிகாரி சத்யராஜ். அவர் முன் நிரபராதிகளான நான்கு இளைஞர்கள் குற்றவாளிகளாய் நிற்கிறார்கள். அவர்களின் உண்மை நிலை அறிந்து அவர்களை வைத்தே உண்மைக் குற்றவாளிகளைப் பிடிக்கிறார் சத்யராஜ் என்று போகிறது படத்தின் கதை. இந்தப் படம் குறித்து சத்யராஜ் கூறுகையில், “படத்தை ஆரம்பித்து 10 நாள் கழிச்சிதான் என்னிடம் வந்தார்கள். ரமேஷ் செல்வன் படம் என்றதும் எனக்கு ‘உளவுத்துறை’தான் நினைவுக்கு வந்தது. அதனால் ஈகோ பார்க்காமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். நல்ல கதை.
ஒரு குறிப்பிடத்தக்க படமாக ‘கலவரம்’ அமையும். இது வன்முறைப் படமல்ல. ஒரு கலவரத்தால் சமூகத்துக்கு ஏற்படும் நன்மைதான் இந்தப் படம். இந்த டீமே ரொம்ப இளமையான டீம். இவர்களிடம் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். என்னைப் போன்ற சீனியர் நடிகர்கள், இறங்கி வந்து இவர்களுடன் இணைந்து வேலை செய்தால்தான் பல நவீன விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். இதில் ஈகோ பார்க்கக் கூடாது,” என்றார். பி.எஸ். பைசல் இசையமைத்துள்ளார். விரைவில் வருகிறது இந்த சினிமா ‘கலவரம்’!
சீனியர்ஸெல்லாம் நல்லா கேட்டுக்கோங்கப்பா….!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காத்திருந்த செய்தியாளர்கள்- ‘எஸ்’ ஆன சத்யராஜ்
» சினிமாவில் மகளை அறிமுகப்படுத்த நடிகர்கள் தயங்கக் கூடாது: அர்ஜுன்
» மக்களை சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது: எம்.எஸ்.பாஸ்கர்
» சத்யராஜ் – அழகான நடிகைகளின் அப்பா
» கமல் வெல்வார்: சத்யராஜ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum