தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திறமையாக நடிக்கிறார்: அர்ஜூன் மகளை பாராட்டிய விஷால்

Go down

திறமையாக நடிக்கிறார்: அர்ஜூன் மகளை பாராட்டிய விஷால் Empty திறமையாக நடிக்கிறார்: அர்ஜூன் மகளை பாராட்டிய விஷால்

Post  ishwarya Fri May 24, 2013 5:44 pm

விஷால் நடிக்கும் பட்டத்து யானை படத்தில் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார். மதுரை, திருச்சி, ஸ்ரீரங்கம், காரைக்குடி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இப்படம் குறித்து விஷால் கூறியதாவது:-

பட்டத்து யானை படத்தில் சமையல்கார இளைஞனாக வருகிறேன். நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டல் ஆரம்பிக்க முயற்சிப்பதும் அது நிறைவேறியதா என்பதும் கதை. காமெடி, பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகி யுள்ளது. கருத்து சொல்லாமல் கல்லா பெட்டியை நிரப்பும் நோக்கில் இயக்குனர் பூபதி பாண்டியன் எடுத்துள்ளார். அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடிப்பது படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா கேமரா பயமின்றி திறமையாக நடிக்கிறார். புதுமுகம் மாதிரி இல்லை. தொழில் அக்கறையோடு ஒவ்வொரு காட்சியிலும் சிரத்தை எடுத்து ஆர்வமாக நடிக்கிறார். நிறைய தன்னம்பிக்கையும் இருக்கிறது. அவரது முதல் படம் எங்களுடைய படமாக அமைந்ததில் சந்தோஷம். இவ்வாறு விஷால் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum