தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹீரோவானார் பாலசந்தர் வீட்டு வாட்ச்மேன்

Go down

ஹீரோவானார் பாலசந்தர் வீட்டு வாட்ச்மேன்  Empty ஹீரோவானார் பாலசந்தர் வீட்டு வாட்ச்மேன்

Post  ishwarya Wed Mar 13, 2013 11:56 am

சென்னை : ஐ ட்ரீம்ஸ் சார்பில் பி.எஸ்.கருணாநிதி தயாரிக்கும் படம் ‘கல்லாப்பெட்டி’. அஸ்வின் பாலாஜி, ரோஸின் ஜாலி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ரா ரா இயக்கி உள்ளார். சபேஷ், முரளி இசை அமைத்துள்ளனர். இதன் பாடல்களை வெளியிட்டு கே.பாலசந்தர் பேசியதாவது: இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள அஸ்வின் பாலாஜி என் வீட்டில் காவலாளியாக இருந்தவர். விடா முயற்சியால் ஹீரோவாகி உள்ளார். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.

இப்போது துடிப்புள்ள இளைஞர்கள் சினிமாவுக்கு வருகிறார்கள். வெவ்வேறு எண்ணங்களுடன் வருகிறார்கள். இது எனக்கு பொறாமையாக இருக்கிறது. நான் சினிமாவுக்கு வரும்போது என்னை வரவேற்க தயக்கம் காட்டினார்கள். இப்போது முதல் படத்திலேயே அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. இளைஞர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். பல கோடியில் படம் எடுத்து ரிஸ்க் எடுக்காதீர்கள். 2 கோடியில் படம் எடுத்து ஒரு கோடி சம்பாதியுங்கள். அதுதான் சினிமாவுக்கும் உங்களுக்கும் நல்லது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் இயக்குனர்கள் பிரபுசாலமன், எழில், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum