எஸ்.ஏ.எஸ் தலைமையில் நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை கோரி கமிஷனரிடம் கேயார் மனு
Page 1 of 1

சினிமா தயாரிப்பாளர் கேயார், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்று வரும் பிரச்னைகள் தொடர்பாக எஸ்.ஏ.சந்திர சேகரன் தலைமையிலான நிர்வாக குழு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பதிவானது. இது தொடர்பான ஆவணங்களை யும் ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டினோம். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய பதிவாளர் பிப்ரவரி 28ல் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாக குழுவை (மொத்தம் 27 பேர்) தகுதி நீக்கம் செய்து கடிதம் அனுப்பினார். அதன்பின் பிலிம் சேம்பர் வளாகத்தில் கடந்த 2ம் தேதி பிரஸ் மீட் நடத்தியபாது பாபுகணேஷ், தலைமையில் ஒரு கும்பல் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம்.மாவட்ட பதிவாளர் மூலம் தகுதி இழப்பு செய்யப்பட்டதாக உத்தரவு வந்த நிலையிலும் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆதரவாளர்கள் தொடர்ந்து பிரச்னை களை உருவாக்கி வருகின்றனர்.
வரும் 24ம் தேதி தி.நகரில் உள்ள தேவர் திருமண மண்டபத்தில் பொதுக்குழு நடத்தப்போவதாகவும் உறுப்பினர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கப்போவதாகவும் பிரசாரம் செய்கின்றனர். நீதிபதி முன்னிலையில் நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதன் மூலமும் மாவட்டப் பதிவாளரே அனைத்து நிர்வாகிகளையும் பதவி இழப்பு செய்து விட்ட நிலையில் எந்தவித அதிகாரமும் உரிமையும் இல்லை என்று தெரிந்தும் வேண்டும் என்றே ஒரு பொது குழுவை ஏற்பாடு செய்து தயாரிப்பாளர்களுக்குள் பயங்கர மோதல்களை ஏற்படுத்தி கலகம் விளைவித்து ஆதாயம் அடைய திட்டம் போடுகிறார் எஸ்.ஏ.சந்திர சேகரன்.எஸ்.ஏ.சந்திரசேகரன், கலைப்புலி தாணு, தேனப்பன், ஆகியோரின் தூண்டுதலின் பேரில் பாபு கணேஷ், ரிஷிராஜ், பாஸ்கர், பாலாஜி, ராஜசிம்மன், ஜெமினி ராகவா ஆகியோர் தான் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். எனவே, தாங்கள் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன் தகுதியே இல்லாதவர்கள் பிரச்னை செய்யும் நோக்கத்துடன் வரும் 24ம் தேதி நடத்த திட்டமிட்டிருக்கும் கூட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்து கூட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தயாரிப்பாளர் கேயார் தலைமையில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது நடவடிக்கை கோரி புகார்
» புதிய அணி தலைமையில் ஃபெப்ஸியுடன் பேச்சு
» எஸ்.ஏ.சந்திரசேகரன் பதவி விலக வேண்டும்: கேயார்
» எஸ் ஏ சந்திரசேகர் மீது கேயார் போலீசில் புகார்!
» எஸ்.ஏ. சந்திரசேகரன் மீது போலீஸில் கேயார் புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum