தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எஸ்.ஏ.சந்திரசேகரன் பதவி விலக வேண்டும்: கேயார்

Go down

எஸ்.ஏ.சந்திரசேகரன் பதவி விலக வேண்டும்: கேயார் Empty எஸ்.ஏ.சந்திரசேகரன் பதவி விலக வேண்டும்: கேயார்

Post  ishwarya Sat Mar 23, 2013 11:41 am



தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாக குழு உடனடியாக பதவி விலக வேண்டும் என தயாரிப்பாளர் கேயார் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து கேயார் செய்தியாளர்களிடம் கூறியது:

நீதிமன்ற உத்தரவுப்படி நடந்த தேர்தலில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளது. அதனை ஏற்று அந்த நிர்வாகக் குழு உடனடியாக பதவி விலக வேண்டும். புது நிர்வாகக் குழுவை தேர்வுச் செய்யும் தேர்தலை நடத்தக் கோரி, சங்கங்களின் பதிவாளரைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க இருக்கிறோம்.

தங்கள் பதவிகளை பாதுகாத்து கொள்வதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தயாரிப்பாளர் சங்கத்தின் நிதி ரூ.15 லட்சத்தை பொதுக்குழுவின் ஒப்புதல் பெறாமல் எடுத்து செலவு செய்துள்ளனர். அதற்கான வரவு, செலவுகளை தேர்ந்தெடுக்கப்படும் புது நிர்வாக அமைப்பிடம் சமர்பிக்க வேண்டும்.

"விஸ்வரூபம்' பிரச்னையில் கமல் தரப்பினருக்கு எந்தவித ஆதரவும் தெரிவிக்காத எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகக் குழுவை கண்டிக்கிறோம். "விஸ்வரூபம்' பிரச்னையைத் தீர்த்து வைத்த தமிழக முதல்வருக்கு நன்றிகூட தெரிவிக்காத தயாரிப்பாளர் சங்க நிர்வாகக் குழுவின் போக்கு கண்டிக்கத்தக்கது என்றார் கேயார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எஸ்.ஏ.சந்திரசேகரன் பதவி விலக தேவை இல்லை: கலைப்புலி தாணு
» எஸ்.ஏ. சந்திரசேகரன் மீது போலீஸில் கேயார் புகார்
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் போட்டி
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் போட்டி
» தயாரிப்பாளர் சங்க விவகாரம்: எஸ்.ஏ.சந்திரசேகரன் - கேயார் ஆதரவாளர்கள் மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum