தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘சிங்கம்-2’ படத்தில் சூர்யாவுக்கு வில்லனாகும் ஹாலிவுட் நடிகர்

Go down

‘சிங்கம்-2’ படத்தில் சூர்யாவுக்கு வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் Empty ‘சிங்கம்-2’ படத்தில் சூர்யாவுக்கு வில்லனாகும் ஹாலிவுட் நடிகர்

Post  ishwarya Sat Mar 16, 2013 2:16 pm

சூர்யா, அனுஷ்கா நடித்து ஹிட்டான படம் சிங்கம். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘சிங்கம்-2’ என்ற பெயரில் ஹரி இயக்கி வருகிறார். இப்படத்திலும் சூர்யா, அனுஷ்காவே நடித்து வருகின்றனர். ஒரு பாடலுக்கு அஞ்சலி நடனமாடியிருக்கிறார்.

தன்னுடைய படங்களில் வெளிநாடுகளை காட்டாத இயக்குனர் ஹரி, இப்படத்தின் மூலம் முதன்முதலாக வெளிநாடு சென்று சில காட்சிகளை எடுக்கவிருக்கிறார். இதற்காக தென்னாப்பிரிக்கா, தான்சானியா ஆகிய நாடுகளுக்கு இப்படக்குழு விரைவில் செல்லவிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக ஹாலிவுட் நடிகர் டேனி சபானி நடிக்கவிருக்கிறார். லண்டனைச் சேர்ந்த இவர் டெலிவிஷன் தொடர்களிலும், ‘தி ஆக்ஸ்போர்ட் மர்டர்’, ‘மெர்சினிரீஸ்’ போன்ற பேர் சொல்லும்படியான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆஸ்கர் விருது இயக்குனர் டேனி பாயல் இயக்கும் ‘ட்ரான்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஹாலிவுட் நடிகரான இவர், ‘சிங்கம்-2’ படத்தில் வில்லனாக அறிமுகமாவது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum