தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியை கலக்கும் பிரகாஷ்ராஜ்

Go down

இந்தியை கலக்கும் பிரகாஷ்ராஜ்  Empty இந்தியை கலக்கும் பிரகாஷ்ராஜ்

Post  ishwarya Mon Mar 11, 2013 1:36 pm

ஜப்பான் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் ஒருவாரம் டைம் கேட்டு வாங்கி ஜப்பான் மொழியை படித்து படப்பிடிப்பில் ஜப்பான் மொழியில் பேசி நடிப்பேன் என்றார் பிரகாஷ்ராஜ் ஒருமுறை. இந்தியில் அவர் கலக்குவதைப் பார்த்தால் யாரும் இதனை ஒத்துக் கொள்வார்கள்.

பிரகாஷ்ராஜ் ஏற்கனவே ஒரு இந்திப் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து அவர் நடித்தது அஜய்தேவ்கான் நடித்த சிங்கம் படத்தின் ரீமேக். இந்தப் படம் பிரகாஷ்ராஜுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

இப்போது தபாங் படத்தின் இரண்டாம் பாகத்தில் மெயின் வில்லனாக நடித்து வருகிறார். இதையடுத்து மீண்டும் அவர் இந்திப் படமொன்றில் கமிட்டாகியிருக்கிறார்.

ரஜினி படம் பண்ணலாம் என்று பல வருடங்களாக தேங்கிப் போன கே.எஸ்.ரவிக்குமார் தனது சிஷ்யன் இயக்கிய சாமி படத்தை இந்தியில் சஞ்சய் தத்தை வைத்து ரீமேக் செய்கிறார். இந்தப் படத்தில் கோட்டா ஸ்ரீனிவாசராவ் நடித்த வில்லன் வேடத்தை செய்யப் போகிறவர் பிரகாஷ்ராஜ்.

சென்னை, ஹைதராபாத், பெங்களூரு என்று பறந்து கொண்டிருந்தவர் இனி அடிக்கடி மும்பைக்கும் பறப்பார் என்பதை இந்த வாய்ப்பு உறுதிபடுத்தியிருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum