தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கலெக்சனில் கலக்கும் நான் ஈ

Go down

 கலெக்சனில் கலக்கும் நான் ஈ Empty கலெக்சனில் கலக்கும் நான் ஈ

Post  ishwarya Sat Mar 09, 2013 5:25 pm


ஹீரோக்கள் பொறாமையில் புகைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நடிக்கும் படங்களே பாக்ஸ் ஆஃபிஸை கலக்கும் என்ற எண்ணத்தை எஸ்.எஸ்.ராஜமௌலியின் நான் ஈ படம் தகர்த்தெறிந்திருக்கிறது. ஈ வில்லனை பழிவாங்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று இடங்களிலும் சக்கைப்போடு போடுகிறது.

இதன் முதல் நாள் வசூல் மட்டும் 17 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் நான் ஈ-க்கு அமோக வரவேற்பு. அபிஷேக் பச்சனின் போல் பச்சான் படத்தைவிட அமெ‌ரிக்காவிலும், யுகே-யிலும் இப்படம் அதிகம் வசூலித்துள்ளது.

மேலும் ஈகா என்ற பெய‌ரில் தெலுங்கில் வெளியாகியிருக்கும் இப்படம் அனைத்து தெலுங்குப்பட ரெக்கார்ட்களையும் முறியடித்துள்ளது. இத்தனைக்கும் நானி என்ற பத்து கோடி பிசினஸ் கூட இல்லாத ஹீரோதான் இதில் நடித்திருந்தார். இந்த வெற்றி ராஜமௌலிக்கும் அவரது கமர்ஷிய‌ல் திரைக்கதைக்கும் கிடைத்தது.

இப்படம் தெலுங்கின் முதல் 100 கோடி வசூலித்த படமாக இருக்கும் என்று படம் வெளியாகும் முன்பு ஆருடம் சொல்லியிருந்தார் ராம் கோபால் வர்மா. அது நடக்கும் போலிருக்கிறது. வர்மா சொன்னது தெலுங்குப் பதிப்பு மட்டும்.
நான் ஈ வசூல், ராஜமெளலி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum