லண்டனில் பாராலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Page 1 of 1

மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் தொடங்கியுள்ளன.
இன்று தொடங்கி அடுத்த 12 நாட்களுக்கு நடைபெறும் இந்தப் போட்டிகளில் 166 நாடுகளைச் சேர்ந்த நான்காயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்குபெறுகிறார்கள்.
லண்டனில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியே, உலகில் அவ்வகையிலான மிகப்பெரிய போட்டியாக இருக்கும்.
ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு இடைப்பட்ட காலப்பகுதியான இருவாரங்களில் இதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன.
பாராலிம்பிக் போட்டிகளுக்கான சின்னம்
ஐந்து வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக் சின்னம், பாராலிம்பிக் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிக்கான சின்னத்தால் மாற்றப்பட்டுள்ளன.
லத்தீன் மொழியில் ‘நான் காற்றில் தவழ்ந்து நகர்கின்றேன்’ என்பதை குறிக்கும் சின்னமான மூன்று அகிடோஸ் சின்னத்தை அனைத்து விளையாட்டு அரங்குகள் மற்றும் பிரிட்டனின் பல பகுதிகளில் காணக்கூடியதாக இருக்கிறது.
உள்ளத்தில் உற்சாகம் குறையாமல் ஜோதியை ஏற்றும் வீரர்
விளையாட்டு வீரர்கள் கடந்த சில தினங்களாக அவர்கள் போட்டியின் போது தங்கியிருக்கும் இடமான விளையாட்டு கிராமத்துக்கு வந்து சேர்ந்துள்ள சூழலில், அவர்களுக்கான சிறப்பு வசதிகள் அனைத்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுக்கும் பெரும் கிராக்கி இருந்ததாகவும் கூறும் போட்டி ஏற்பாட்டாளர்கள், இவை எந்த அளவுக்கு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதற்கு மேலும் இது ஒரு உதாரணமெனவும் கூறுகிறார்கள்.
உடல் குறைபாடுகளை மற்ந்து பயிற்சிப் போட்டியில் இரு வீரர்கள்
ஆனாலும் வட அமெரிக்கப் பகுதிகளுக்கான ஒளிபரப்பை செய்யும் அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனம், தினமும் தொகுக்கப்பட்ட அளவில், ஒரு சில மணி நேரமே இந்தப் போட்டிகளை காண்பிக்க எடுத்துள்ள முடிவு பல்தரப்பில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இம்முறை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடுகளும் அதன் வீரர்களும் கலந்து கொள்வது, இந்தப் போட்டிகளுக்கு உலக அளவில் மேலும் ஒரு ஏற்றமும் ஆதரவும் கிடைத்துள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது என்று பிபிசியின் விளையாட்டுச் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கொலைக் குற்ற சந்தேகத்தின் பேரில் பாராலிம்பிக் சாம்பியன் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் கைது
» சிந்தனையைத் தூண்டும் குறுக்கெழுத்துப் போட்டிகள்
» 'நீச்சல் போட்டிகள் நிறைந்த தினம்'
» டி 20' உலகக் கோப்பை போட்டிகள் இலங்கையில் தொடங்கவுள்ளன
» ஐ.பி.எல்.: சென்னை 'பிளே ஆப்' போட்டிகள் டெல்லிக்கு மாற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum