தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐ.பி.எல்.: சென்னை 'பிளே ஆப்' போட்டிகள் டெல்லிக்கு மாற்றம்

Go down

ஐ.பி.எல்.: சென்னை 'பிளே ஆப்' போட்டிகள் டெல்லிக்கு மாற்றம் Empty ஐ.பி.எல்.: சென்னை 'பிளே ஆப்' போட்டிகள் டெல்லிக்கு மாற்றம்

Post  ishwarya Sat May 04, 2013 12:11 pm

ஆறாவது ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து, சென்னையில் நடைபெறும் போட்டிகளில் மட்டும் இலங்கை வீரர்கள் தவிர மற்ற வீரர்களை தேர்வு செய்துகொள்ளும்படி ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்தது. அதன்படி இலங்கை வீரர்கள் சென்னை தவிர மற்ற மைதானங்களில் விளையாடி வருகின்றனர்.

லீக் ஆட்டங்கள் முடிந்து 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தேர்வு செய்யப்படும். இதில் முதல் இரண்டு பிளே ஆப் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும் முதல் பிளே ஆப் போட்டி மே 21-ம் தேதியும், ஒரு அணியை வெளியேற்றும் அடுத்த போட்டி 22-ம் தேதியும் நடைபெற இருந்தது.

ஆனால், பல்வேறு தடைகளைத் தாண்டி பிளே ஆப் சுற்றில் ஆடும்போது, இலங்கையின் முன்னணி வீரர்கள் இல்லாமல் வலுவான அணியை தேர்வு செய்ய முடியாது என்றும், அதனால் அவர்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்றும் அணிகளின் உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்ற ஐ.பி.எல். நிர்வாகம், இலங்கை வீரர்கள் விளையாடும் வகையில், சென்னை பிளே ஆப் போட்டிகளை டெல்லிக்கு மாற்றியுள்ளது. சென்னையில் நடைபெற இருந்த அதே நாளில் இப்போட்டிகள் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும்.
tamil matrimony_INNER_468x60.gif

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  பஞ்சாப் அணியை வென்று 'பிளே ஆப்' சுற்றுக்கு சென்னை அணி தகுதிப்பெற்றது
» டெல்லிக்கு எதிரான ஆட்டம்: பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» சென்னையில், 22-ந்தேதி ஐ.பி.எல். குழு கூட்டம்: பிளே ஆப் ஆட்டம் மாற்றப்படுமா?
» சிந்தனையைத் தூண்டும் குறுக்கெழுத்துப் போட்டிகள்
» லண்டனில் பாராலிம்பிக் போட்டிகள் தொடக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum