இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஷேவாக் நீக்கம்
Page 1 of 1

இந்தியாவின் அதிரடி துவக்க ஆட்டக்காரர் விரேந்திர ஷேவாக் ஒரு நாள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஒரு நாள் போட்டிகளில் அவரது ஆட்டம் திருப்திகரமாக இல்லாத காரணத்தாலேயே இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடருக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை.
இம்மாதம் 11 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட் நகரில் தொடங்கவுள்ள முதல் போட்டி உட்பட முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வுக் குழுவினர் ஞாயிறன்று அறிவித்தனர்.
அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?
அதில் ஷேவாகின் பெயர் இடம் பெறவில்லை என்றாலும், அவரைப் போன்றே அண்மைய ஆட்டங்களில் குறைந்த ஓட்டங்களைப் பெற்ற கவுதம் கம்பீர் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஷேவாக் கடைசியாக ஆடிய பத்து ஒரு நாள் போட்டிகளில் மொத்தமாக 238 ஓட்டங்களே மட்டுமே எடுத்த நிலையில், அவர் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று ஊகங்கள் எழுந்தவண்ணம் இருந்தன.
டில்லியின் ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஞாயிறன்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியிலும் விளையாட ஷேவாகுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஷேவாக் இதுவரை விளையாடியுள்ள 251 ஒரு நாள் போட்டிகளில் 15 சதங்கள் உட்பட 8273 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
சேதேஸ்வர் புஜாரா
அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள அணியில் சேதேஸ்வர் புஜாரா சேர்க்கப்பட்டுள்ளார்.
அணியின் தலைவராக தோனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ரவிச்சந்திரன் அஷ்வின், அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா உட்பட மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலிருந்து பொன்டிங் அதிரடியாக நீக்கம்
» இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய தரவரிசைப் பட்டியல்! பிசிசிஐ அறிவிப்பு!
» ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

» நேபாள நாட்டு கிரிக்கெட் தூதராக இந்திய கேப்டன் டோனி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum