இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய தரவரிசைப் பட்டியல்! பிசிசிஐ அறிவிப்பு!
Page 1 of 1
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய தரவரிசைப் பட்டியல்! பிசிசிஐ அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய தரவரிசைப் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதில், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் “ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளார். அதேசமயம், ஏ பிரிவிலிருந்த ஹர்பஜன் “பி’ பிரிவுக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
கிரிக்கெட் வீரர்களின் அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் 3 பிரிவுகளில் வீரர்கள் வரிசைப்படுத்தப்படுவர். பிரிவுகள் அடிப்படையில் வீரர்களுக்கு ஊதியம் கூடுதலாகவும் குறைவாகவும் அளிக்கப்படுகிறது.
ஓர் ஆண்டுக்கு, “ஏ’ பிரிவு வீரர்களுக்கு ரூ.1 கோடி, “பி’ பிரிவு வீரர்களுக ரூ. 50 லட்சமும் ஊதியம் அளிக்கப்படுகிறது.
ஏ பிரிவில் இருந்த மூத்த வீரர்கள் திராவிட், லட்சுமணன் ஆகியோர் சமீபத்தில் ஓய்வு பெற்றனர். இந்நிலையில், அஸ்வின் மட்டுமே ஏ பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அஸ்வின், 8 டெஸ்ட் போட்டிகளில் 49 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேபோல் 40 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய இவர் 56 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
அதேசமயம், தொடர்ந்து தடுமாறி வந்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஏ பிரிவிலிருந்து பி பிரிவிக்கு பின்னடைந்தார். தர அடிப்படையில் இடம் பிடித்த வீரர்கள் விவரம் வருமாறு:
ஏ பிரிவு: சச்சின் டெண்டுல்கர், தோனி, ஜாகீர் கான், சேவாக், கம்பீர், ரெய்னா, யுவராஜ் சிங், விராட் கோலி, அஸ்வின்.
பி பிரிவு: ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, புஜாரா, ரஹேனா, இர்ஃபான் பதான், ஓஜா, உமேஷ் யாதவ்.
சி பிரிவு: ரவீந்திர ஜடேஜா, அமித் மிஷ்ரா, வினய் குமார், முனாஃப் படேல், அபிமன்யு மிதுன், முரளி விஜய், ஷிகார் தவான், ரித்திமான் சாஹா, பார்த்தீவ் படேல், மனோஜ் திவாரி, பத்ரிநாத், பியூஷ் சாவ்லா, தினேஷ் கார்த்திக், ராகுல் ஷர்மா, ஆரோன், அபினவ் முகுந்த், அசோக் திண்டா, யூசுஃப் பதான், பிரவீண் குமார், பாலாஜி.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நேபாள நாட்டு கிரிக்கெட் தூதராக இந்திய கேப்டன் டோனி!
» நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு!
» இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஷேவாக் நீக்கம்
» ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum