கிரிக்கெட்: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது
Page 1 of 1

சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவருகின்ற இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது சர்வதேச டெஸ்ட் ஆட்டத்தின் நான்காம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா வெற்றியின் நெருக்கத்துக்கு வந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகளை 232 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
தொடர்புடைய பக்கங்கள்
டோணியின் அபார இரட்டைச் சதம்
ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருக்க 40 ரன்களால் மட்டுமே ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதலில் மட்டை பிடித்து 380 ரன்களை எடுத்தது. அணித்தலைவர் கிளார்க் அதிகபட்சமாக 130 ரன்களை எடுத்திருந்தார்.
இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் மிகச் சிறப்பாக பந்துவீசி முதல் இன்னிங்ஸில் 7 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளைக் கொய்திருந்தார்.
இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக ஆடியிருந்தது. அணித் தலைவர் தோணி அதிரடி இரட்டைச் சதம் ஒன்றை அடித்து டெஸ்ட் ஆட்டம் ஒன்றில் தனது அதிகபட்ச எண்ணிக்கையாக 224 ரன்களை எடுத்திருந்தார். விராத் கோலியும் சதம் அடிக்க இந்தியா 572 ரன்களை எடுத்தது.
192 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை இன்று விளையாடிய ஆஸ்திரேலிய மட்டைவீச்சாளர்களால் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியவில்லை.
நடுவரிசை ஆட்டக்காரர் ஹெண்ரீக்கைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அரை சதத்தை எட்டுவதற்கு முன்பாகவே ஆட்டமிழந்தனர். ஹெண்ரீக் 75 ரன்களுடன் விளையாடி வருகிறார் என்றாலும், இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருக்கிறது.
இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியாவின் அஷ்வின் அதிகபட்சமாக ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். சுழற்பந்துவீச்சாளர்கள் ஹர்பஜன் சிங்கும் ரவீந்திர ஜடேஜாவும் மற்ற நான்கு ஆஸ்திரேலிய விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சென்னை ஆடுகளத்தில் ஆட்டத்தின் கடைசி நாளன்று விக்கெட்டைக் காப்பாற்றிக்கொள்வது கஷ்டம் என்பதால், இந்தியா இந்த ஆட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்கள் குத்துச் சண்டை : இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு
» கிரிக்கெட்: கொல்கத்தா டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி
» 5 வருடத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றி!

» சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணி நாளை தேர்வு- ஷிகார் தவானுக்கு வாய்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum