கிரிக்கெட்: கொல்கத்தா டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி
Page 1 of 1

இந்தியா எதிரான டெஸ்ட் தொடரில் மூன்றாவது டெஸ்டை வென்று 2-1 என்ற எண்ணிக்கையில் இங்கிலாந்து தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
கொல்கத்தாவில் நடந்துவந்த மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தின் ஐந்தாம் நாளான ஞாயிறன்று தனது இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி ஒரு விக்கெட்டுடன் மட்டை பிடிக்க ஆரம்பித்த இந்திய அணி வெறும் பத்து பந்துகள் மட்டுமே தாக்குப் பிடித்தது. பிரக்யான் ஓஜா ஆட்டமிழக்க 247 ரன்களில் இந்தியா சுருண்டது.
தொடர்புடைய விடயங்கள்
விளையாட்டு
41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 9 ரன்களை எட்டுவதற்கு முன் மளமளவென மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் அதன் பின்னர் நிக் கொம்ப்டனும் இயன் பெல்லும் நிலைத்து நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த ஆட்டத்தில் முதலில் மட்டை பிடித்திருந்த இந்திய அணி 316 ரன்களில் ஆட்டமிழந்திருந்தது. பின்னர் இங்கிலாந்து 523 ரன்களைக் குவித்து பெரும் முன்னிலை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 27 ஆண்டுகால இடைவெளிக்குப் பின் இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்லக்கூடிய வாய்ப்பு இங்கிலாந்துக்கு பிரகாசமாகியுள்ளது எனலாம்.
நான்கு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அடுத்த ஆட்டத்தில் தோல்வியைத் தவிர்த்தாலே இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றிவிடும்.
நான்காவது ஆட்டம் நாக்பூரில் வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்குமானால் அது 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சந்தித்த தோல்விக்குப் பின்னர் சொந்த மண்ணில் இந்தியா தோற்கும் முதல் டெஸ்ட் தொடராக அமையும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சென்னை டெஸ்டில் இந்தியா வெற்றி
» இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் வெற்றி பெறுமா?
» இந்துக்களின் போர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொக்குவில் இந்து வெற்றி
» கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி பெறுமா?
» கிரிக்கெட்: இந்தியா, இலங்கை வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum