பெண்கள் குத்துச் சண்டை : இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு
Page 1 of 1

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டுகளில், முதல் முறையாக மகளிருக்கான குத்துச் சண்டைப் போட்டி இடம்பெறும் நிலையில், இந்தியாவின் மேரி கோம் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இன்று மாலை இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் மேரி கோம் துனீஷியாவின் மரோவா ரஹாலியை 15-6 என்கிற புள்ளிக் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதன் மூலம் அவருக்கு குறைந்தபட்சம் ஒரு வெண்கலப் பதக்கமாவது கிடைப்பது உறுதியாகியுள்ளது.
அரையிறுதிப் போட்டியில் அவர் பிரிட்டனின் நிக்கோலா ஆடம்ஸை எதிர்த்து நாளை மறுதினம்-புதன்கிழமை போட்டியிடுகிறார்.
ஆனால் பதக்கம் பெறும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக முன்னர் கூறப்பட்ட துப்பாக்கிச் சுடும் போட்டியில், இந்திய அணியினரின் திறமை கேள்விக் குறியாகியுள்ளது.
ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபில் போட்டியில் ககன் நரங் மற்றும் சஞ்ஜீவ் ராஜ்புத் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.
அதேபோல மானவ்ஜித் சந்துவும் தமது பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.
இத்துடன் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய துப்பாக்கிச் சுடும் அணியினரின் பங்கேற்பும் முடிவுக்கு வந்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வந்த இந்திய துப்பாக்கிச் சுடும் அணியினர், ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை மட்டுமே வென்றுள்ளனர்.
இதேவேளை இந்தியக் குத்துச் சண்டை வீரர் விகாஸ் கிருஷண் வெற்றி பெற்றாதாக அறிவித்த பிறகு அந்த முடிவு மாற்றப்பட்டதை எதிர்த்து, இந்தியா செய்த மேல் முறையீட்டை விளையாட்டுக்களுக்கான சர்வதேச தீர்ப்பாயம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
போட்டி நடுவர்களின் முடிவு இறுதியானது என்றும் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனத்தின் போட்டி விதிகளில் இடமில்லை என்றும் கூறியே அந்தத் தீர்ப்பாயம் இந்தியாவின் மேல் முறையீட்டை நிராகரித்துள்ளது

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இந்திய குத்துச் சண்டை சம்மேளனம் இடைநீக்கம்
» ஒலிம்பிக்ஸ்-குத்துச் சண்டை முடிவில் சர்ச்சை
» கிரிக்கெட்: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது
» வீட்டுத் தோட்டங்களில் அலங்கார குத்துச் செடிகள்
» 5 வருடத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum