5 வருடத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றி!
Page 1 of 1
5 வருடத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றி!
டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் எட்டு சுற்றில் இந்தியாவுக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி கிடைத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
2007 முதல் டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டி நடந்து வருகிறது. தற்போது நடப்பது 4வது உலகக் கோப்பைப் போட்டியாகும். முதல் உலகக் கோப்பையை டோணி தலைமையிலான இளம் இந்திய அணி அசகாயமாக வென்று கலக்கியது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக 2009, 2010 ஆகிய தொடர்களில் இந்தியா பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. சூப்பர் எட்டு வரை மட்டுமே அந்த்த தொடர்களில் இந்தியா முன்னேறியது. ஆனால் சூப்பர் எட்டு சுற்றில் ஒரு போட்டியில் கூட அது வென்றதில்லை.
இந்தக் கேவலத்தை நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் துடைத்து விட்டது இந்தியா. அப்படியும் கூட முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் நாசகரமான தோல்வியைச் சந்தித்தது இந்தியா. சரிதான், இந்த வாட்டியும் நம்மவர்கள் கேவலப்படப் போகிறார்கள் என்றுதான் ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் நேற்று பாகிஸ்தானிடம் இந்திய வீரர்கள் காட்டிய புயல் வேகம் ரசிகர்களை நிமிர வைத்து விட்டது.
சரியாக 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா சூப்பர் எட்டு சுற்றில் ஒரு வெற்றியைப் பதிவு செய்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 5 வருடத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றி!
» கிரிக்கெட்: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது
» லண்டனில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்
» லண்டன் பாராலிம்பிக்ஸ்:இந்தியாவுக்கு முதல் பதக்கம்
» ஸ்ருதிஹாசன் - கடைசியாக கிடைத்த வெற்றி
» கிரிக்கெட்: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது
» லண்டனில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்
» லண்டன் பாராலிம்பிக்ஸ்:இந்தியாவுக்கு முதல் பதக்கம்
» ஸ்ருதிஹாசன் - கடைசியாக கிடைத்த வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum