நெல்லி லேகியம்
Page 1 of 1
நெல்லி லேகியம்
தேவையான பொருட்கள்:
அருநெல்லிக்காய் சாறு – 500 மி.லி
சுக்கு -50 கிராம்
மிளகு -50 கிராம்
அரிசி திப்பிலி -59 கிராம்
சீரகம் -50 கிராம்
ஓமம் -50 கிராம்
கிராம்பு -50 கிராம்
ஏல அரிசி -50 கிராம்
கொத்தமல்லி -50 கிராம்
பெருஞ்சீரகம் -25 கிராம்
கருஞ்சீரகம் -25 கிராம்
அதிமதுரம் -25 கிராம்
நன்னாரி வேர் -25 கிராம்
அமுக்கிரான் கிழங்கு -25 கிராம்
கடுக்காய்த் தோல் -25 கிராம்
சர்க்கரை -1 கிலோ
தேன் -500கிராம்
நெய் -500கிராம்
குங்குமப்பூ -5 கிராம்
செய்முறை:
அருநெல்லிக்காய் இரண்டு கிலோ அளவுக்கு எடுத்துக் கல்லு உரலில் இடித்து விதையைப் போக்கி மீண்டும் இடித்து சலவைத் துணியில் இடித்ததை வைத்து பீங்கான் பாத்திரத்தில் குறிப்பிட்டுள்ள அளவு பிழிந்து கொள்ளவேண்டும். சர்க்கரை, தேன், நெய், குங்குமப்பூ நீங்கலாக மருந்துச் சரக்குகளை கல் உரலில் தட்டி இளம் வறுலாக வறுத்து இடித்து வடிகட்டிக் கொள்ளவேண்டும்.
நெல்லிக்காய் சாற்றை இரும்புக் கடாயில் ஊற்றி சர்க்கரையை இடித்துப் போட்டு கொதி வந்ததும் இடித்த மருந்துச் சரக்குகளைக் கொட்டி நன்றாகக் கிளறி விட்டு தேனை ஊற்றி கிண்டி நெய்யை ஊற்றி கிளறி விட்டு இளகல் பதத்தில் இறக்கி குங்குமப்பூவைப் போட்டு கிண்டி வேறு பாத்திரத்தில் மாற்றி பாத்திரத்தில் வாயை துணியால் மூடி ஆறு மணி நேரம் வெயிலில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
காலை 10 கிராம் எடை
மாலை 10 கிராம் எடை
வெந்நீர் அல்லது பாலுடன் 40 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்.
தீரும் நோய்கள்:
நா வறட்சி, இளைப்பு, களைப்பு, மூட்டு வலிகள், இடுப்பு பிடிப்பு, கபக்கட்டு, விந்து நஷ்டம், துரித ஸ்கலிதம், விந்து நீத்துப் போதல், தலைச் சுற்று, வயிற்றுக் கோளாறுகள், பசி இன்மை, மூத்திர எரிச்சல், மலக்கட்டு, பேதி குறையும், பெண்களுக்கு மாத விடாய்க் கோளாறு, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, தூரக் குறைவு ஆகிய நோய்கள் குறையும். உடல் வலிவும் வனப்பும் ஏற்படும்.
ஒரு வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் இளைப்பாக இருந்தால் 5 கிராம் எடை இளகலை இரண்டு பங்காக்கி வேளை 40 நாட்கள் கொடுக்க வேண்டும்
குறிப்பு:
மருந்துண்ணும் நாட்களில் கடலைப் பருப்பு, பூசணி, பறங்கி, தயிர், பழஞ்சோறு, மது வகைகளையும் நீக்க வேண்டும்.
மாமிச உணவையும், முட்டையையும் உணவில் சேர்த்து உண்ணலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum