நெல்லி நெல்லி நெல்லி
Page 1 of 1
நெல்லி நெல்லி நெல்லி
இந்தியன் கூஸ்பெர்ரி என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நெல்லி சமஸ்கிருததத்தில் தத்திஃபாலா பூமியின் எதிர் காலம் என்றும் ஹிந்தியில் ஆம்லா சுத்தமானது என்றும் பெயர் பெற்றுள்ளது. தாவரவியலில் எம்பிளிக்கா அஃபிஸினேலிஸ் என்று வகைப்படுத்தப்பட்டு எம்பிளிமிரோ பாலன் என்று பொதுவாக விளங்குகின்றது. நாகரீகம் தோன்றிய காலம் முதலே மனிதனுடைய வாழ்வில் செடி, கொடிகளும், மூலிகைகளும் இணைந்து விட்டன. வாழ்க்கையின் பல தருணங்களில் மூலிகைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. அன்றாட வாழ்வில் எளிமையாக கிடைக்கக் கூடியதும் பல நற்பலன்களை மனிதனுக்கு தருகின்ற மூலிகைகளின் முதலிடத்தை பெறுவது நெல்லியாகும். சரகர் தனது ஆயுர்வேத நூலில் நெல்லியை சிறப்பாக விளக்கி நெல்லி மனிதனுக்கு அனைத்து நோய்களையும் எதிர்க்கும் திறனை தருகிறது என்றும் நெல்லி வயது முதிர்ச்சியை காலம் தாழ்த்துகிறது என்றும் பெருமைப்பட எழுதியுள்ளார். ஆயுர்வேத மருத்துவ முறையில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகள் தான் மனிதனின் சீரான இயக்கத்திற்கு அடிப்படையாக கருதப்படுகிறது. அவை சீர்குலையும் பொழுது தான் மனிதன் நோயை உணர்கின்றான். அந்த மூன்று தோஷங்களான (நாடிகளையும்) நெல்லி சமன் செய்து சீர்படுத்துகின்றது. மூன்று நாடிகளின் ஏற்றத் தாழ்வுகளை சரிசெய்து நோய் வராமல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகின்றது.
நெல்லி மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் படைத்தவை என்றாலும் குறிப்பாக நெல்லிக்காய் நெல்லிக்கனி சிறப்பான மருத்துவ குணத்தை பெற்றவை. நெல்லிக்காய், குளிர்ச்சியாகவும், உடல் உஷண்த்தை தணிக்கக் கூடியதாகவும், மலமிளக்கியாகவும், வீரியத்தை அதிகப்படுத்தக் கூடியாதாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் ஆயுர்வேத மருத்துவத்தில் திகழ்கின்றது. நெல்லிக்காயில் அதிகமான அளவு வைட்டமின் ‘சி’ எனப்படுகிற ‘அஸ்கார்பிக் ஆசிட்’ கிடைக்கின்றது.
இவ்வகை இயற்கை மூலிகை வகை வைட்டமின் ‘சி’ உலர்ந்த நிலையிலும், அதிக உஷ்ண நிலையிலும் கெடாமல் கிடைக்கின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்து திரிபலா என அழைக்கப்படுகின்றது. திரிபலா குடலை சுத்தம் செய்வதற்கும், பசியை தூண்டுவதற்கும் ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதற்கும் மலமிளக்கியாகவும் உபயோகிக்கப்படுகின்றது. மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து எளிதாக மலம் கழிக்க உதவுகின்றது.
நெல்லி மூளைக்கு வலுவூட்டியாகவும் திகழ்கிறது. மன அழற்சியை குறைத்து மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது. நெல்லிக்காயை பொடியாக்கி அதனை பல பிரச்சனைகளுக்கு எளிதாக பயன்படுத்தலாம். ஆயுர்வேதத்தில் ‘சியவளபிராஷ்’ போன்ற தயாரிப்புகளில் நெல்லி முக்கிய இடத்தை வகிக்கின்றது. வாழ்க்கையை செவ்வனே வாழ்வதற்காக பரிந்துரைக்கப்படும் அனேக ஆயுர்வேத தயாரிப்புகளில் நெல்லி இடம் பெறுகின்றது. இவை தவிர பெரும்பாலான மூலிகை தயாரிப்புகளிலும் இடம் பெறுகின்றது. ஷாம்பூ, சோப்பு, சீயக்காய், குளியல் பவுடர், முகப்பொலிவு தயாரிப்புகள் ஆகியவற்றிலும் நெல்லி முதலிடத்தை பெற்றுள்ளது. கூந்தல் தைலம், முடி வளர்க்கும் தைலம், முடியை கருமைப்படுத்த உதவும் பிற தயாரிப்புகளிலும் நெல்லி இடம் பெறுகின்றது. உலர்ந்த நெல்லி தூள் வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகின்றது. நெல்லி பொதுவாக ஊறுகாய் ஆகவும் சமையலிலும் உபயோகிக்கப்படுகின்றது.
நெல்லிக்காய் ஜுஸ்
தேவை
பெரிய நெல்லிக்காய்-10
சீனி-1/2கப்
தேன்-2டே.ஸ்பூன்
எலுமிச்சம்பழம்-1
செய்முறை
நெல்லிக்காயை கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய ஜுஸீடன் தண்ணீர், சீனி, தேன் சேர்த்துக் கலக்கவும். எலுமிச்சம் பழத்தைப்பிழிந்து ஜுஸ் எடுத்து அதில் கலக்கவும். ஐஸ் க்யூப்களை போட்டு பருகவும். நெல்லிக்காய் அடிக்கடி சேர்ப்பதால் கண்பார்வை நன்கு தெரியும். இரும்புச் சத்து இருப்பதால் இரத்த சோகை நீங்கும். முடி நன்கு வளரும். நீரிழிவு நோய் குறையும்.
நெல்லிக்காய் டிலைட்
தேவை
பெரிய நெல்லிக்காய்-10
ஜாதிக்காய் பொடி-1சிட்டிகை
வெல்லக் கரைசல்-2டே.ஸ்பூன்
காய்ச்சிய பால்-1/2டம்ளர்
செய்முறை
நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி அரைத்துக் கொள்ளவும். அதனுடன் ஜாதிக்காய் பொடி, பால், வெல்லக்கரைசல் சேர்த்துக் கலந்து பருகவும்.
வெயில் காலத்தில் இதை பருகுவதால் உடல் சூட்டைக் குறைத்து குளிர்ச்சியை தருகிறது. இரும்புச் சத்தையும் தருகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நெல்லி லேகியம்
» கோடைக் கால நெல்லி சர்பத்
» நெல்லி மசாலா தொக்கு
» வெற்றிலை நெல்லி ரசம்
» வெற்றிலை நெல்லி ரசம்
» கோடைக் கால நெல்லி சர்பத்
» நெல்லி மசாலா தொக்கு
» வெற்றிலை நெல்லி ரசம்
» வெற்றிலை நெல்லி ரசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum