தாண்டவம் கதை - தனஞ்செயனின் விளக்கம்
Page 1 of 1
தாண்டவம் கதை - தனஞ்செயனின் விளக்கம்
தாண்டவம் படத்தின் கதை தனது என்று உதவி இயக்குனர் பொன்னுசாமி புகார் தந்திருப்பதை அடுத்து பிரச்சனை பூதாகரமாகியிருக்கிறது. தனஞ்செயனிடம் தான் படிக்கத் தந்த ஸ்கிரிப்டை ஒட்டியே தாண்டவம் படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது பொன்னுசாமியின் குற்றச்சாற்று. இதனை தனஞ்செயன் மறுத்திருக்கிறார்.
பொன்னுசாமி தன்னிடம் கதை சொல்லும் முன் விஜய் தாண்டவம் படத்தின் கதையை சொன்னதாகவும், தான் அவருக்கு அட்வான்ஸ் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் பொன்னுசாமியின் கதைக்கும், விஜய்யின் ஸ்கிரிப்டுக்கும் வித்தியாசம் அதிகமுண்டு எனவும் தெரிவித்திருக்கிறார். பொன்னுசாமியின் கதை தனஞ்செயனுக்குத் தெரியும் என்பதால் அந்த ஸ்கிரிப்டில் இடம்பெற்ற காட்சிகளை தாண்டவத்தில் பயன்படுத்தியிருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் அவர் புகார் தந்திருக்கிறார். வெறும் யூகத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்ட புகார் இது என விமர்சித்திருக்கிறார் தனஞ்செயன்.
பொன்னுசாமி கதை சொல்வதற்கு முன்பாக விஜய் கதை சொன்னதாகவும், அட்வான்ஸ் தந்ததாகவும் தனஞ்செயன் கூறுவது உண்மையா என்பது அவருக்கும், விஜய்க்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அப்படியே உண்மையாகயிருந்தாலும் பொன்னுசாமியிடம் கதை கேட்ட பின் விஜய் ஸ்கிரிப்டில் மாற்றம் செய்திருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
பொன்னுசாமியின் ஸ்கிரிப்டுக்கும், விஜய்யின் ஸ்கிரிப்டுக்கும் வித்தியாசம் அதிகமுண்டு என்று சொல்வதிலிருந்தே ஒற்றுமைகள் இருப்பதை தனஞ்செயன் ஒத்துக் கொள்கிறார். மேலும் பொன்னுசாமியின் கதை பார்வையற்ற ஒருவன் எதிரிகளை பழி வாங்குவதைப் பற்றியது. இதே ஒன் லைன்தான் தாண்டவம் படத்தினுடையது என்பது முக்கியமானது.
தனஞ்செயனின் யூகத்தின் அடிப்படையில் புகார் என்ற குற்றச்சாற்று அர்த்தமற்றது. வெளியாகாத படத்தைப் பற்றி யூகத்தின் அடிப்படையில் மட்டுமே புகார் தர முடியும். அதிலும் தனது ஒன் லைனை அப்படியே கொண்டிருக்கும் ஒரு படத்தைப் பற்றி அது வெளிவந்த பிறகா புகார் தருவார்கள்?
மேலும் தனஞ்செயனும் விஜய்யும் இணைந்து உருவாக்கிய தெய்வத்திருமகள் அப்பட்ட காப்பி. இவர்கள் தனது ஸ்கிரிப்டை காப்பி அடித்திருக்கலாம் என்று பொன்னுசாமி பயப்படுவது இயல்புதானே.
தற்போது இரு ஸ்கிரிப்ட்களும் இயக்குனர்கள் சங்கத்தில் தரப்பட்டுள்ளன. இரண்டுக்கும் வித்தியாசம் அதிகம் என்று பொன்னுசாமியின் புகார் புறந்தள்ளப்பட்டாலும் சந்தேகம் சந்தேகமே.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தனஞ்செயனின் அறச்சீற்றமும் மனுஷ்யபுத்திரனின் பதிலும்
» தாண்டவம்!
» சப் டைட்டிலுடன் தாண்டவம்
» நறுக்கப்பட்ட தாண்டவம்
» வெளிநாட்டில் தாண்டவம் வசூல்
» தாண்டவம்!
» சப் டைட்டிலுடன் தாண்டவம்
» நறுக்கப்பட்ட தாண்டவம்
» வெளிநாட்டில் தாண்டவம் வசூல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum