தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

27ம் வயதில் என்னென்ன நடக்கும்?

Go down

27ம் வயதில் என்னென்ன நடக்கும்? Empty 27ம் வயதில் என்னென்ன நடக்கும்?

Post  amma Wed Jan 09, 2013 10:58 pm

27ம் வயதில் நடைபெறும் நிகழ்வுகள்
பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.


ஜோதிடத்தில் பலன்கள் கூற நிறைய விதிமுறைகள் உள்ளன அவற்றில் உள்ள கருத்துக்களை மக்களிடம் எளிமைப்படுத்தி கூறுவதற்காக இருக்கும் முறைகளில் ஒன்று தான் பிருகு சரல் பத்ததி. இம்முறையில் ஜோதிடத்தின் பலன்களை முழுமையாகவும் எளிமையாகவும் தெரிந்து கொள்ளமுடியும்.

ஒருவருடைய வாழ்வில் நடைபெறும் அல்லது நடைபெற இருக்கும் அனைத்தும் கோள்களின் தாக்கங்கள் மூலம் தான் நடைபெறும் என்பது ஜோதிடக் கருத்து. ஜோதிடத்தில் கூறப்படும் பலன்கள் அனைவருக்கும் பொதுவானது தான். ஆனால் கோள்களின் பலம் மற்றும் தாக்கங்கள் பாவங்களுக்குத் தக்கவாறு விளைவுகளைக் கொடுக்கின்றன. உதாரணமாக ஏழாம் பாவம் களத்திரம் மற்றும் திருமணம் தொடர்பானது. திருமணத்திற்கான கால நேரத்தைக் கணக்கிடும் போது 7ம் பாவம் மட்டுமல்லாமல் இரண்டாம் பாவம் (குடும்பம்) ஐந்தாம் பாவம் (குழந்தைகள்) இவையும் முதல்பாவம் (வாழ்வின் அடுத்த நிலை) , பதினொன்றாம் பாவம் ( இலாபம் ) இப்படி பலதரப்பட்ட காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜோதிடப்பலன்கள் பார்க்கும் பொழுது வயது மிக முக்கிய காரணியாக அமைகிறது. காரணம். பாவங்கள் 12தான் அது வாழ்க்கையின் முழுமைக்கும் பொதுவானது. எடுத்துக்காட்டாக 7ம் பாவம் களத்திரம் திருமணம் அது 7வயது குழந்தைக்குப் பொருந்துமா என்றால் இல்லை நண்பர்கள் என்ற எல்லையில் நின்றுவிடும் அதே போலத்தான் 27ம் வயது என்பது காதல், திருமணம், வேலை, உயர்கல்வி, குழந்தைகள் இது போன்ற காரகங்கள் நடைபெறக்கூடிய காலகட்டம்.

ஒரு பாவம் ஒன்றுக்கும் மேற்பட்ட செயல்களுக்குப் பொறுப்பேற்கிறது. அதைத்தான் காரகத்துவம் என்கிறோம். உதாரணமாக 4ம் பாவம் தாய் கல்வி வாகனம் காமம் வீடு இது போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட காரகத்துவங்கள் ஒவ்வொரு பாவத்திற்கும் உண்டு.

ஒரு செயல் நடக்கும் கால நேரங்களை கணிக்க ஜோதிடத்தில் உள்ள முறைகளில் பிருகு சரல் பத்ததி முறையும் ஒன்று. அதிலிருந்து ஒரு பகுதி.


பகுதி – 6

ஜெனன ஜாதகத்தில் செவ்வாய் எங்கிருக்கிறாரோ அவரிடமிருந்து எண்ண வரும் 10ம் பாவ பலன்களில் ஒன்று ஜாதரின் 27ம் வயதில் நடைபெறும்.



விளக்கம்.

கால புருசத்தத்துவப்படி மேசம் முதல் பாவம். மகரம் 10ம் பாவம். மகரத்தில் செவ்வாய் உச்சம் கடகத்தில் செவ்வாய் நீசம். மேசம், விருச்சிகம் செவ்வாய் ஆட்சி வீடுகள். மேசம் செவ்வாயின் மூலத்திரிகோண வீடு.

உதாரணமாக மீன இலக்கிண ஜாதகருக்கு செவ்வாய் 10ல் அதாவது தனுசில் இருப்பதாக வைத்துக்கொண்டால் செவ்வாய் இருக்கும் தனுசில் இருந்து 10ம் இடமாக வருவது கன்னி. கன்னி இலக்கிணத்திலிருந்து 7ம் இடம். அதாவது செவ்வாய் (தனுசு) முதல் எண்ண 10ம் இடமாக வரும் (கன்னி) இலக்கிணத்திற்கு 7ம் பாவமாக விளங்குவதால் 7ம் பாவ காரகத்துவங்களில் ஒன்று இந்த ஜாதகரின் 27ம் வயதில் நடைபெறும். ( இந்த ஜாதகருக்கு திருமணம் இந்த காலகட்டங்களில் தான் நடந்தது. )

அனைவருக்கும் இதே காலகட்டங்களில் கண்டிப்பாக திருமணம் நடைபெற்றுவிடுமா? என்றால். இல்லை. காரணம் 7ம் பாவம் என்பது திருமணம் மட்டும்அல்ல. நண்பர்கள், கூட்டுவியாபாரம், மாரகம், 4க்கு நான்காகவிளங்குவதால் வாகனத்தின் மூலமும் தாயின் மூலமும் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி. இது போன்ற எது வேண்டுமானாலும் ஜாதகரின் 27ம் வயதில் கிடைக்கப் பெறலாம்.

மேலும் செவ்வாய் இருக்கும் இடத்திற்கு 10ம் இடத்தில் உள்ள கிரகங்களின் காரகத்துவங்களும் இதில் அடங்கும். பிருகு சரல் பத்ததின் மீதான விளக்கங்களும் தேடல்களும் ஆராய்ச்சிகளும் இவை சரியாக இருக்கிறது என்று உணர்தியிருக்கின்றன.

நீங்களும் உங்கள் வாழ்வில் 27ம் வயதை ஆராய்ந்து பார்த்தால் உண்மையை உணர முடியும்.

ஆராய்தல் தொடரும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆண்களுக்கு 37 வயதில் மகிழ்ச்சி! பெண்களுக்கு 30 வயதில் மலர்ச்சி!!
» நானும், என் கணவரும் இரண்டு வருடங்கள்கூட சேர்ந்து வாழ இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம். நாங்கள் சேர்ந்து வாழ என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கு 20 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
» பெற்ற குழந்தைகளை பட்டினி போட்டு கொன்ற ஜப்பான் பெண்ணுக்கு 30 ஆண்டு சிறைஜப்பானின் மேற்கு ஒசாகா நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வருபவர் சானே நகமுரா (வயது 25). இவருக்கு 3 வயதில் ஒரு மகள் மற்றும் ஒன்றரை வயதில் மகன் இருந்தனர். கணவன் இல்லாமல் தனியாக வாழ்ந
» 27ம் தேதி முதல் வழக்கு எண் 18/9
» ஏப்ரல் 27ம் தேதி வழக்கு எண் 18/9 ரிலீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum