Life of Pi - சென்னை வருகிறார் ஆங்க் லீ
Page 1 of 1
Life of Pi - சென்னை வருகிறார் ஆங்க் லீ
இந்தியா ஹாலிவுட் படங்களுக்கான சரியான சந்தை என்பதை அமெரிக்கர்கள் கண்டு பிடித்து பல வருடங்களாகிறது. எடுக்கிற படத்தில் ஒரு இந்தியரை நடிக்க வைப்பது, ஒரு காட்சியை இந்தியாவில் படமாக்குவது, இந்து புராணம் சார்ந்த ஏதாவது ஒன்றை படத்தில் நுழைப்பது என இந்திய மார்க்கெட்டை முழுமையாக கபளீகரகம் செய்ய இவர்கள் அடிக்கும் குட்டிக்கரணம் அடுத்து அடுத்து என போய்க் கொண்டேயிருக்கிறது.
இந்த மார்க்கெட் கேப்சரிங் நோக்கமின்றி ஆங்க் லீ Life of Pi படத்தை எடுத்திருப்பார் என நம்புவோம். யான் மார்டெல்லுக்கு புக்கார் பரிசைப் பெற்றுத் தந்த நாவலைதான் அதே பெயரில் ஆங்க் லீ படமாக்கியிருக்கிறார். 3டி-யில் நவம்பர் 23 படம் உலகமெங்கும் வெளியாகிறது, முக்கியமாக இந்தியாவில்.
இந்திய இளைஞன் ஒருவன் கப்பல் விபத்துக்குப் பிறகு புலி ஒன்றுடன் ஒரு படகில் நடுக்கடலில் மாட்டிக் கொள்கிறேன். பிறகு அவனும், புலியும் என்னானார்கள் என்பதுதான் கதை. இந்தியப் பின்னணியில் எழுதப்பட்ட கதை என்பதால் இர்ஃபான் கான் (இவரையும், அனில்கபூரையும் விட்டால் ஹாலிவுட்காரர்களுக்கு வேறு யாரையும் தெரியாதோ?) தபு ஆகியோரும் நடித்துள்ளனர். அந்த தப்பிப் பிழைத்த இளைஞன் வேடத்தில் சுராஜ் சர்மா. இது யார் என்று மண்டையை உருட்ட வேண்டியதில்லை, ஆள் புதுமுகம்.
படத்தின் சில காட்சிகளை ஆங்க் லீ புதுச்சேரி, மூணார் பகுதிகளில் எடுத்திருக்கிறாராம். இதன் காரணமாக வரும் ஞாயிறு இந்தியா வந்து மும்பை, சென்னையில் நடக்கும் படத்தின் புரமோஷனில் கலந்து கொள்கிறார். உடன் இர்பான் கான், தபு இருப்பார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. படத்தின் அருமையான இருபது நிமிடங்கள் 3டி-யில் காட்டப்படும் என்றெல்லாம் பிரஸ்ஸுக்கும் பிரபல விஐபி விருந்தாளிகளுக்கும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ ஆசை காட்டியிருக்கிறது.
ஐட்டம் சாங் இல்லாத படத்தை நம்ம ரசிகர்கள் திரும்பி பார்க்கிறதில்லைங்கிற விவரம் இவர்களுக்குத் தெரியாதோ.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டைரக்சனுக்கு வருகிறார் ரத்னவேலு
» அமலாவும் வருகிறார்
» வருகிறார் சக்சேனா
» எம்.ஜி.ஆர்-ஆக வருகிறார் விஷால்!
» தமிழுக்கு வருகிறார் தபு
» அமலாவும் வருகிறார்
» வருகிறார் சக்சேனா
» எம்.ஜி.ஆர்-ஆக வருகிறார் விஷால்!
» தமிழுக்கு வருகிறார் தபு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum