தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழுக்கு வருகிறார் தபு

Go down

தமிழுக்கு வருகிறார் தபு             Empty தமிழுக்கு வருகிறார் தபு

Post  ishwarya Tue Mar 05, 2013 5:27 pm


விரைவில் பிரகாஷ்ரா‌ஜ் இயக்கும் படத்தில் தபு நடிக்க உள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் தயாராகிறது.


டோனி படத்துடன் இயக்குனரான பிரகாஷ்ரா‌ஜ் அடுத்து தயா‌ரித்து இயக்கி நடிக்கும் படம்... ஸா‌ரி படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதுவொரு ‌ரீமேக். மலையாளத்தில் ஸ்வேதா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருது பெற்றுத் தந்த சால்ட் அண்ட் பெப்பர் படத்தின் ‌ரீமேக்.

சால்ட் அண்ட் பெப்பர் என்றதும் மங்காத்தாவில் அ‌ஜீத்தின் ஹேர் ஸ்டைல் நினைவுக்கு வந்திருந்தால் அதை அழித்திடுங்கள். இது சாப்பாட்டைப் பற்றிய படம். படத்தின் நாயகன் லால் - நம்ம சண்டைக்கோழி வில்லனேதான் - ஒரு சாப்பாட்டுப் பி‌ரியர். பெண் பார்க்கப் போன இடத்தில் பட்சணம் நன்றாக இருந்தது என்று அதனை தயா‌ரித்த வீட்டு வேலைக்காரரை (இதில் நடித்தவர் பாபு ரா‌ஜ்) தன்னோடு அழைத்துக் கொள்ளும் அளவுக்கு சாப்பாட்டு பி‌ரியர்.

ஸ்வேதா மேனன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அவரும் இதே சாப்பாடு கேட்டக‌ரியை சார்ந்தவர். இவர்கள் எதேச்சையாக போனில் பேசிக் கொள்ள நட்பு வளர்கிறது. ஆள் எப்படி இருப்பார் என்ன ஏது என்று தெ‌ரியாததால் லால் தனக்குப் பதில் வேறொரு பையனையும், ஸ்வேதா மேனன் தனக்குப் பதில் வேறொரு இளம் பெண்ணையும் அனுப்பி வைக்கிறார்கள். இந்த இளம் ஜோடி ஏற்கனவே அறிமுகமாகி காதலிப்பவர்கள். அத்துடன் லால், ஸ்வேதா மேனனின் பார்க்காமலே லவ்வும் டெவலப் ஆகிறது.

சிம்பிளான ஃபீல்குட் படமான இதன் ‌ரீமேக் ரைட்ஸை மொத்தமாக வாங்கி தானே தயா‌ரித்து இயக்கி லால் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரகாஷ்ரா‌ஜ். ஸ்வேதாமேனன் வேடத்தில் தபு.

இந்தப் படத்தின் ஹைலைட் வேலைக்காரராக வரும் பாபுரா‌ஜ். வில்லனின் அடியாளாக வந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இந்தப் படத்தில் காமெடி, குணச்சித்திரம் இரண்டும் செய்யும் சகலகலாவல்லவனாக ப‌ரிமாணம் கொண்டு இப்போது நாயகன் அந்தஸ்தில் நடிக்கிறார்.

இவரது வேடத்துக்கு பிரகாஷ்ரா‌ஜ் யாரை தேர்வு செய்யப் போகிறார் என்பது சவாலான கேள்வி.
தபு, பிரகாஷ்ராஜ், சால்ட் பெப்பர் ரீமேக்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum